13/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷ ராசிபலன்
இன்று நீங்கள் தேவையை அறிந்து செயலாற்றவும். தகுந்த பலன்களை நாளிறுதியில் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் நாளாக இருக்கும். உடலாற்றல் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் ராசிபலன்
இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக இருப்பீர்கள். தனலாபம் சிறப்பாக இருக்கும் நாளாகும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.
மிதுன ராசிபலன்
இன்று நீங்கள் பதட்டமான சூழ்நிலையில் இருப்பீர்கள். குழப்பங்கள் தீர தியான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.
கடக ராசிபலன்
இன்றைய செயல்களை பொறுமையாக செய்தல் அவசியம் ஆகும். அவசர புத்தியை அமைதிப்படுத்தி கொள்ளவும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். எனவே வேலைக்கு விடுப்பு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளவும். குடும்பத்துடன் இருப்பதே உங்களுக்கு இன்று நல்லது.
சிம்மம் ராசிபலன்
இன்று செழிப்பான நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் சிறப்பாக முடிவடையும். வேண்டிய அனைத்தும் தானாக வந்து சேரும் நாளாகும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக காணப்படும்.
கன்னி ராசிபலன்
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் வெற்றிகரமான நாளாக இருக்கும். கூடுதலான பலன்கள் வந்து சேரும். பணவரவு சிறப்பாக இருக்க போகும் நாளாகும்.
துலாம் ராசிபலன்
இன்று ஏதாவது சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். எனவே மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். உறவுகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.
விருச்சிக ராசிபலன்
இன்று எதிர்பார்த்த பலன்கள் எதுவும் கிடைக்காது. மிதமான பலன்களை மட்டுமே பெறுவீர்கள். பணியில் கவனத்தை செலுத்தவும். தேவையற்ற செயல்களை செய்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
தனுசு ராசிபலன்
இன்று உங்களின் லட்சியங்கள் நிறைவேற முறையான திட்டமிடல் அவசியமாகும். பணவரவு போதுமான அளவு கிடைக்க உழைப்பு அவசியமாகும். கணவன் மனைவியிடையே புரிதல் அவசியம் தேவையாகும்.
மகரம் ராசிபலன்
இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயலாற்றும் நாளாகும். திருமணம் போன்ற நற்காரிய பேச்சு துவங்க ஏதுவான நாளாகும். பணியிடத்தில் நற்பெயரை பெறுவீர்கள். கூடுதல் பணவரவு கண்டிப்பாக இருக்கும்.
கும்ப ராசிபலன்
இன்று உங்களிடம் புரிந்துணர்வு அவசியம் தேவையாகும். கோபத்தை குறைத்து கொள்வது அவசியம் தேவை. தங்களின் குடும்ப வாழ்வில் சில கசப்பான சம்பவங்கள் இன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.
மீனம் ராசிபலன்
இன்று பக்தியால் நற்பலன்கள் எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பணியாளர்களிடம் அனுசரணை மிக முக்கியமாக தேவையாகும். வீட்டில் நட்பான பேச்சுகளை பேசவும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
13/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.