Home ஜோதிடம் 25/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

25/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

639
0
25/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

25/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

சிறு சிறு உடல்நலப் பிரச்சினைகள் வந்து வந்து போகும் நாளாகக் காணப்படுகிறது. முருகரை வழிபட அவற்றிலிருந்து விடுபட வழி பிறக்கும்.

சிலர் புதிய போதைப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடலாம். அதிலிருந்து விடுபடுவது அவசியம். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாளாகக் காணப்படுகிறது. புதிய எதிரிகள் உருவாகலாம். அண்டை அயலாரோடு பகைமை கொள்ளாமல் இணக்கம் கொள்வது அவசியம்.

வியாபாரகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் வதந்தி பேசாமல் இருப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண்: 1

மிதுன ராசிபலன்

பஞ்சமத்தில் சந்திரன் இருப்பது பெரும் பாக்கியத்தைத் தரும் நாளாகக் காணப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீர்ந்து நல்ல பெயர் எடுக்கும் நாளாகக் காணப்படுகிறது.

கண் சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். வியாபாரிகளுக்கு சிறந்த லாபம் உண்டு.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம்

கடக ராசிபலன்

வீடு கட்ட நல்ல கடன் வசதி கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகக் காணப்படுகிறது.

சகோதரர்களுடன் பகை கூடாது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் நினைத்த வண்ணமே கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் ராசிபலன்

அதீத தைரியத்தோடு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றியடையும் அமைப்பு காணப்படுகிறது. ஆடம்பரச் செலவு செய்யாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

கன்னி ராசிபலன் 

சந்திரன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல தனவரவு உண்டு. வீடு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

வண்டி, வாகனங்களில் வித்தைகள் வேண்டாம். வீடு கட்டும் அமைப்பு கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

துலாம் ராசிபலன்

ராசியிலேயே சந்திரன் உலாவுவதால் சிறு சிறு, மனக்குழப்பம், டென்ஷன் அதிகரிக்கும். சந்தனப் பொட்டிட்டு சந்திரனை வணங்க மன இறுக்கம் குறையும். முதுகு வலி ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம். அதிர்ஷ்ட எண் : 4

விருச்சிக ராசிபலன்

எலும்பு சம்மந்தமான பிரச்சினைகள் வந்து வந்து போகலாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

வயது முதிர்ந்தோர் தங்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். நாடகக் கலைஞர்கள் புகழ் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

தனுசு ராசிபலன்

சந்திரன் லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு. எடுத்த காரியத்தில் ஜெயம் ஆகியவை உண்டு.

இளைஞர்கள் விபரீத விளையாட்டுக்களைத் தவிர்ப்பது நலம் பயக்கும். மின்சாதனங்களைக் கையாள்கையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

மகரம் ராசிபலன் 

உற்சாகமான ரம்மியமான நாளாகக் காணப்படுகிறது. சந்தோஷங்கள் நிரம்பி வழியும் நாளாகக் காணப்படுகிறது.

மனைவியுடன் இணக்கம் ஏற்படும். கழுத்து வலி வந்து நீங்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு வண்ணம், எண்: 9

கும்ப ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. மிகவும் நல்ல நாள். நினைத்த யாவும் நினைத்தபடியே அமையும். கேளிக்கை, விளையாட்டு என நண்பர்களோடு குதூகலிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

தூர தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். நிறைய ஆடம்பரப் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பால் வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

மீனம் ராசிபலன் 

சந்திரன் எட்டில் காணப்படுவதால் சிக்கல் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. சொல்லும் கருத்துக்கள், செய்யும் செயல்கள் ஆகியவற்றில் கவனம் தேவை.

தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. சிலருக்கு ரம்மியமான மனதிற்கினிய நிகழ்வுகள் நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

25/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleபாகிஸ்தான் குடியுரிமை பெற உள்ளார் வெ.இண்டீஸ் சமி
Next articleசர்தார் படேல் மைதானம் டிரம்ப் & மோடி திறந்து வைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here