கொரோனா வந்தவுடன் கண்டறிய எளிய வழிகள். New symptoms of coronavirus. கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் புதிய உண்மை புலப்பட்டு உள்ளது.
பிரிட்டிஷ் ரைனலாஜிகல் சொசைட்டி தலைவர் கிளேர் ஹாப்கின்ஸ் மற்றும் இங்கிலாந்து மருத்துவர் குழு தலைவர் நிர்மல் குமார் இருவரும் சேர்ந்து ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று (coronavirus) ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் தான் கொரோனா அறிகுறிகள் நமக்கு தெரியவரும். தொண்டை எரிச்சல், இருமல், காய்ச்சல் வந்த பிறகே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்கின்றனர்.
அதற்குள் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவி விடுகிறது. கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் தீவிர ஆய்வு மேற்கொண்டதில் ஒரு உண்மை புலப்பட்டு உள்ளது.
புதிய கொரோனா அறிகுறிகள்
அவர்களிலும் பெரும்பாலனவர்கள் கூறியது ஒரே போல் இருந்தது. அவர்களால் சுவைய உணர முடியவில்லை. மேலும், வாசனையையும் நுகர்வதில் சிக்கல் இருந்துள்ளது.
இவர்களுக்கு மற்ற அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, இருமல் வருவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்சனைகள் இருந்துள்ளது.
பூண்டின் வாசனையைக் கூட அவர்களால் நுகர முடியவில்லை. இதில் ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், இந்த நேரத்தில் இது நமக்கு உதவும்.
காய்ச்சல், இருமல் வந்தால் தான் கொரோனா வந்துள்ளது என எண்ணாமல் அதற்கு முன்பே உங்களுக்கு வாசனை நுகர்தல் பிரச்னை இருந்தாலோ, சுவை அறிதல் பிரச்னை இருந்தாலோ மருத்துவரை அணுகி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தாரிடம் இருந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.