Home Latest News Tamil தயாரிப்பாளரை கொள்ளையடித்த இயக்குனர் தம்பதி!

தயாரிப்பாளரை கொள்ளையடித்த இயக்குனர் தம்பதி!

463
0

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்பிடம் இருந்து கார் ஒன்றை பரிசாக பெற்றார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்படாமல் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஓரே ஒரு சஸ்பென்ஸ், மொத்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவிற்கு கனக்கச்சிதமாக திரைக்கதை அமைத்து இருந்தார் தேசிங்கு பெரியசாமி.

சமீபத்தில் தான் இவர் திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் செய்தது வேறு யாரும் இல்லை படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த நிரஞ்சனி அகத்தியன் தான்.

படத்தில் நிரஞ்சனியின் ஜோடியாக ரக்ஷன் நடித்திருப்பார். அவர் காரணம் இல்லாமல் நடிக்கவில்லை. ரக்ஷனுக்கும், தேசிங்கிற்கும் ஓரளவு உருவ ஒற்றுமையுண்டு.

இதன் காரணமாகவே ரக்ஷனை நடிக்க வைத்தார். நிஜக்காதலை கொஞ்சம் படத்திலும் வைத்து அழகு பார்த்துள்ளார் தேசிங்கு பெரியசாமி.

தேசிங்கு பெரியசாமி மற்றும் நிரஞ்சனா அகத்தியன் இருவரும் தயாரிப்பாளர் மனதை கொள்ளையடித்ததால் இருவருக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ஆண்டோ ஜோசப்.

அடுத்த படத்திற்கு இப்போதே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டார் போல. சூப்பர் ஸ்டார் ரஜினியே ஒரு கதை ரெடி பண்ணச்சொல்லி போன் பண்ணியாச்சு. அப்புறம் என்ன? ஓரே ஜமாய் தான்!!

The post தயாரிப்பாளரை கொள்ளையடித்த இயக்குனர் தம்பதி! appeared first on MrPuyal Cinema.

Previous articleவசந்த பஞ்சமி: சரஸ்வதி பூஜை ஏன் செய்ய வேண்டும்?
Next articleயாதும் ஊரே யாவரும் கேளிர்: இயக்குனருக்கே தெரியாமல் வெளியான டீசர்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here