நிர்பயா கற்பழிப்பு வழக்கு: தள்ளி செல்லும் தூக்கு தண்டனை? நிர்பயா இறந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
நிர்பயா கற்பழிப்பு வழக்கு
கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்க பட்டு தூக்கு தண்டனை விதிக்கபட்டது.
கொலையாளிகளைத் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்கபட்டுள்ளது.
எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனக்கூறி திகார் சிறை நிர்வாகம் சார்பில் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உலக அளவில் இந்தியா குறித்த தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கிய வழக்குகளில் நிர்பயா வழக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .
பெண்கள் போராட்டம்
சம்பவம் நடந்த காலத்தில் நாடும் முழுவதும் பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் பெரிய அளவில் போராட்டம் நடத்தின. ஏன்? உலக அளவில் நிர்பயா விவகாரம் எதிரொலித்தது.
நமது நாட்டில் எத்தனையோ பாலியல் வழக்குகள் இருந்தாலும் நிர்பயா விவகாரம் தலைநகரில் நடந்த காரணத்தினால் நாடு முழுவதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்த பொது விவாதங்களும் நடந்தன.
நிர்பயா நிதி
நடைபெற்ற போராட்டங்களின் பயனாக மத்திய அரசு நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்காக ‘நிர்பயா நிதி’ என்ற திட்டத்தை வருடந்தோறும் நிதி ஒதுக்கி செயல் படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்குதண்டனை மேல்முறையீடு
இதனிடையே குற்றவாளிகளின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த டெல்லி பாலியல் விரைவு நீதிமன்றம் குற்றம் சாற்றப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என அனைத்து வகையிலும் மேல்முறையீடு குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
7 ஆண்டுகள் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை
ஏற்கனவே சட்ட நடைமுறைகள் நிறைவடைய கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தூக்கு தண்டனையில் இருந்து தப்புவதற்காக குற்றவாளிகள் ஒவ்வொருவராக சட்ட நிவாரணிகளை பயன்படுத்தி வந்தனர்.
முதலில் கருணை மனு, பின் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது இன்னும் முடிந்த பாடில்லை.
இது ஒருபுறம் இரண்டாவது முறையாக கடந்த 1 தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்த அனைவரும் நீதிமன்ற உத்தரவால் தப்பி பிழைத்தனர்.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவர்கள் அனைவரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து குற்றவாளிகளுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி தீர்ப்பளித்தனர்.
திகார் சிறை நிர்வாகம்
இந்த நிலையில்தான் குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கினை டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள்காட்டி கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், தனது உத்தரவில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த ஒருவார கால அவகாசம் நிறைவடைந்த பிறகு மீண்டும் இந்த மனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது .
எனினும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 11 தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.