பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ? முக்கிய அறிவிப்பு
கொரோன வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த முறையான அறிவிப்பு வரும் 19 தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்:
தமிழக்தில் வரும் ஜூன் 1 தேதி முதல் 12 தேதி வரை பத்தாம் வகுப்பு மற்றும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்று அண்மையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் .
உயர்நீதிமன்றத்தில் மனு:
இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் ராஜா என்பவர் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில்தேர்வினை ஒத்திவைக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார் .
குறித்த மனுவானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
பெற்றோர் சுணக்கம்:
மேலும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் தேர்வு குறித்த எந்த விருப்பமும் இல்லை என்று தெரிகிறது .
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் தேர்வு மையத்திற்கு மாணவர்கள் வருகை புரியும் பொது உரிய பாதுகாப்பது வழிமுறைகளை கையாண்டு தேர்வு எழுத வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார் .
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:
இந்நிலையில் ஈரோட்டில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து எடுத்து வருவதாக தெரிவித்தார் .
மே 19 தேதி முக்கிய அறிவிப்பு:
மேலும் பேசிய அவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த தெளிவான அறிவிப்பு வருகிற 19 தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் .
உயர்நீதிமன்றத்தில் தேர்வு குறித்த வழக்கு விசாரிக்கப்பட இருப்பதால் பெற்றோர் மத்தியில் குழப்பம் காணப்படுகிறது .
அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பினை பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.