2.0 Official Trailer விமர்சனம்…. வழங்குவோர்…. கோகோ கோலா, நியூஸ் 7, லைப்ஸ்டைல், டாபிகானா, வீட்டா இங்க்லீஷ் கிளாஸ், நிப்பான் பெயின்ட், ஆப்பிள் ஐபோன்…
ஒரு வருஷம் முன்னவே, 2.0 ஆடியோ வெளியிட்டில் பிரிவியூ செய்ய ரெடி பண்ணிய டீசரை, புத்தம் புது டீசர் போல், வெளியிட்டார் சங்கர்.
இந்த ஓட்ட.. ஓடச டீசர பாக்க தான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணோமானு ரசிகர் கடுப்பாக,
ட்ரைலர்ல பாருங்க எப்படி மிஸ்டேக் எல்லாம், சரி பண்ணி விட்றேன்னு சொன்னார். சொன்ன மாறியே ஒரு சில கொறைய சரி பண்ணிட்டாப்லபா நம்ம சங்கர் ஜி.
25 vfx ஸ்டூடியோ, 2150 vfx ஷாட், 3d கேமரா, வி.கேம் டெக்னாலஜி இன்னும் பற்பல புது டெக்னாலஜில உருவான 2.0 படத்தோட ட்ரைலர் எப்படி இருக்குனு பாக்கலாம்.
2.0 ட்ரைலரும் அதே டவர்ல் தான் ஆரம்பிக்குது. இந்த முறை டவருக்கு கீழே இன்னொரு நபர் ஓடி வராரு. தூக்கில் தொங்குனது, அக்ஷய இல்ல ஓடி வர்றது அக்சயானு சின்ன கன்பியுசன்… ஆனாலும், செத்தா தான பேயாவோ, வேற பிறவியோ எடுக்க முடியும்.
அடுத்து ஓட்டல் சாப்பிடும் சீன், போன முறை டீசரில் இந்த நபரிடம் செல்போன் இருக்காது. இந்த முறை இருக்கின்றது.
நெக்ஸ்ட் லைப்ஸ்டைல் முன் டீசரில் கும்பலாக செல்பி எடுத்துக்கொள்வார்கள். ஏன் தேவையில்லாம செல்பி என கேட்டிங்கள… அதனால கொஞ்ச பேர சும்மா நடந்துபோவ வச்சிட்டாரு ஷங்கர் பட எடிட்டர்…
அடுத்து எமி ஜாக்சன் ஒரு ரோபோ… அப்டிங்கிற சஸ்பென்ஸ் உடையுது… வசிகரன் செய்த மேஜிக், பொம்பள ரோபோ அறிமுகம். பட்டன தட்டினது டக்குனு சட்டைய கழட்டி, பாக்குறவங்களுக்கு கிர்ர் ஏத்துது எமி ரோபோ.
சிட்டி திரும்ப வந்தா சும்மாவா விடும் இந்த எமிய. ஒரு சின்ன கிஸ் பண்ணதுக்கே ஐஸ் வர்யாவ… வர்யானு கூப்டிச்சு..
எமிய பாத்தா சும்மாவா விடும், அதுவும் மீடூ சர்ச்சையில் சிக்கிய மாயா கிருஷ்ணன் வேற வசியோட அசிஸ்டன்ட் போல, ஒன்னும் தெரியாத சிட்டிக்கு, ஜகஜால வித்தைகளை மாயா கிருஷ்ணன் கத்துக்கொடுத்தாலும் கொடுப்பாங்க.
கருணாசும், சந்தானமும் இந்த முறை இல்லை. அதுக்கு பதிலா மாயாவ களத்துல இறக்கி விட்டுடாப்ல சங்கர் ஜி…
அடுத்து ஒரு ஹை கிளாஸ் குடும்பம். அதுல ஒரு குடும்பப்பாங்கான பொண்ணு, தொடையழகி ரம்பாவை ஓவர் டேக் செஞ்சிடும் போல, பாத்துமா செல்போன் பறக்குதுன்னு சொல்லி அவசரத்துல காலத் தூக்கிடாத, படத்துக்கு அப்புறம் சென்சார் பிரச்சனை வந்திடும்.
நெக்ஸ்ட்.. நம்ம சிவகுமார் அங்கிள். செய்ய்…. சிவகுமார் இல்லப்பா அக்சய் குமார். செல்போன்னதும் சிவகுமார் நியாபகம் வந்திடுச்சு. அந்த குடும்பத்தோட செல்போன பறிச்சிட்டு போயிடுறாரு.
செல்போன் பறிக்கிற ஷாட்டவே படத்துல ஒரு அரைமணி நேரம் காட்டுவாரு போலயே சங்கரு…
அடுத்து நம்ம வசியோட போனவே பட்டுன்னு தட்டி, நொட்டுனு தூக்கிட்டாப்ல அக்சய். அத நம்ம ரோபோ எமி பே..ன்னு… வாய் பாக்குது. ஷங்கர் ஜி எமிக்கு ஒரு நாலு பைட் சீன் குடுங்க…
அடுத்து நம்ம நியூஸ் 7 விளம்பரம். விளம்பரத்த படத்துகுள்ள தான் வச்சிட்டு இருந்தாரு சங்கரு… இப்போ டீசர் ட்ரைலர்ல வேற வக்க ஆரம்மிசிட்டாரு…
ஏப்பா… நியூஸ் செவன், எவ்ளோ ரூபா…ப.. குடுத்திங்க… டீசர், ட்ரைலர்னு, படம் முழுக்க உங்க பேனர் தான் பெர்சா வரும் போல…
அடுத்து ஒரு பிகரு… கருப்பு ட்ரஸ்ல காத பொத்துது. ரொம்ப பயந்த சுபாபம் போல, அக்சய் கழுகு போட்ட சத்தத்துல பயந்துகிச்சு.
எந்திரன் சிட்டி… அக்சய் கழுக, பொரட்டி எடுக்கும் பாத்த, அத பாத்து பயந்து பயந்து பில்டிங் பில்டிங்கா ஓடுது.
சும்மா.. கழுகு வேசத்துல… ஒருத்தன விடாம, கதற விடுறாப்ல நம்ம அக்சய் கொமாரு. நீங்க கொக்கி கொமாரவிட பெரிய ஆளு தான் போங்க…
செல்போன் போஸ்டர கூட விட்டு வக்கமா பயர் பண்ணுறாரு அக்சய். அப்டி என்னாப்பா கடுப்பு இந்த செல்போன் மேல…
அடுத்து எம்பாமிங் செய்யப்பட்ட ரோபோன்னு கிண்டல் அடிக்க பட்ட எந்திரன் சிட்டி ரோபோவோட என்ட்ரி சீன்… எத்தனை மொறதான் கலாய்கிறது உன்ன…
அங்கிட்டு போ சிட்டி… சும்மா குளோசப்ல மூஞ்ச காம்சி கண்டேத்திட்டு இருக்க. அப்புறம்.. அந்த சைனா பொண்ணு சிரிச்சிட்டே ஓடுமே அந்த ஷாட்….
அடுத்து அக்சய் குமார் செல்போன் மனிதனா மாறி, கொய்யால ஒருத்தன கூட விடமாட்டேன். எல்லாருமே கொலைகாரனுங்க. செல்போன கண்டாலே எல்லாரும் அலறணும்னு கட்டபொம்மன் சிவாஜி ரேஞ்சுக்கு வசனம் பேசுறாரு…
செல்போன் தொரத்த, ஒருத்தர் தொப்பைய வச்சிட்டு ஓட முடியாம ஓடுறாரு… அனேகமா அவர் கதம் கதம்னு நினைக்கிறன்.
அடுத்து பேட்மேன், ஸ்பைடர்மேன் எல்லாரையும் தோற்கடிக்கிற ஒரு கெட்அப். சிட்டிய மார்ல குத்தி… பீஸ் பீசா பிச்சு எறிஞ்சிட்டு, மிரட்டலா கெத்தா போஸ் குடுக்குறாரு அக்சய்.
ரெக்கைகள் சிலிர்க்குது. அனேகமா இதான் படத்தோட இன்டர்வெல் சீன்னு நெனக்குறேன்…
நெக்ஸ்ட் அக்சய்… குப்ப மேடு போல மறைஞ்சி, டக்குனு கழுகா மாறுற சீன்ல ஷங்கரின் பிரமாண்டத்தை, பிரமிப்பா பாக்க வச்சிட்டாங்க… நம்ம வி.எப்.எக்ஸ். கலைஞர்கள்…
சோக்கா.. இருந்திச்சுப்பா அந்த சீன்னு….
செத்துப்போன ரோபோ சிட்டியோட நியூரல் ஸ்கீமாவ எடுத்து, புது சிட்டி… டெரர் சிட்டிய உருவாக்குது நம்ம எமி ரோபோ… கால், கை, தலனு பாத்து பாத்து ரெடி பண்ணுது எமி ஜாக்சன்…
C-யவும்.. பவர் சிம்பிளவும் லோகோவ வச்சிட்டு… வீர சிட்டி உருவாகிடுச்சு … எமி ஒத்தால ஒரு ரோபோ உருவாக்கிடுச்சு…
அப்போ வசீகரன்.. அனேகமா மட்ட தான்… அக்சய் சிட்டிய செய்றதுக்கு முன்ன, வசியோட சோழிய முடிச்சிட்டாப்ல போல…
ஐ அம் சிட்டி… ரிலோடட்னு அக்சய் குமார் முன்னால கைய ஒரு குத்து குத்தி காமிக்குது பாருங்க நம்ம சிட்டி ரோபோ… அட அட.. அந்த குக்கூ சீன் மாதிரி செம்ம வெயிட்… வெர்சன் 2.0னு சொன்னதும் அக்சய் காண்டாயிட்டாப்ல.
நெக்ஸ்ட் நம்ம மிலிட்டரி சீன். ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சாலும், வன்ட்டடா போயி அடி வாங்குறதவே வேலையா வச்சிருக்காங்க. பிரங்கிக்கெல்லாம் தண்ணி காட்டுறாரு நம்ம கழுகார்.
திரும்ப எந்திரன் சிட்டி… மூஞ்ச காமிச்சி வெறுப்பேத்துது.. போ போயி 2.0 சிட்டிய வர சொல்லு. ஒரு டைம் சொன்ன நூறு டைம் சொன்ன மாதிரி. திரும்ப வந்த சூப் வச்சி குடிச்சிடுவேன்.
நெக்ஸ்ட் நம்ம 2.0 சிட்டி… ஒரு பெரிய படைய உருவாக்குது. விரல்ல பெரிய சைஸ் துப்பாக்கியோட அப்கிரேட் ஆயிருக்கு… ஏதாவது ஓவரா சேட்ட பண்ணுனா, பட்டுனு பொட்டுலவே போற்றும் போல.
ஐயோ இந்த ஓல்ட் சிட்டி தொல்ல தாங்க முடியல. திரும்ப திரும்ப காமிச்சி எடிட்டர் காண்டேத்ராப்ல…
பயந்து பயந்து ஓடுது, பறக்குது, ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல. தெண்டம். பயந்தகோழி ரோபோவ எவ்ளோ டைம் பாக்குறது…
ஐஸ்வர்யா இல்லைன்னு பீலிங் போல, அதான் சண்ட போட எனர்ச்சி இல்லமா, பயந்து ஓடுது…
அடுத்து அக்சய் செல்போன விட்டுபுட்டு, ஸ்ட்டேடியத்துல இருக்க எலக்ட்ரிக்சிட்டி பவர புல்லா இழுக்குராப்ல…
அப்புறம் ஸ்டேடியத்துல ஒருத்தர மட்ட பண்ணுராப்ள அக்சய்… அனேகமா அந்த ஆளு தான்… அக்சய் சாக… காரணம் போல.
நெக்ஸ்ட் டீசர் சீன் பா.. போன் ரோபோவ மாறி சிட்டிய நோக்கி ஓடுது. யாருகிட்ட சிட்டிகிட்டவேவா.
கழுக கூட்டுல சத்தி கதறவிடலாம் பாத்தா, ஓட்ட வெளிய ஓடி சிட்டிக்கே டப்பு குடுக்குது அக்சய் கழுகு.
சிட்டி மட்டும் என்ன தக்காளி தொக்கா… அதுவும் எல்லா ரோபோவையும் ஒண்ணா சேத்து.. பெரிய ரோபோவா மாறி, அக்ஷய் குமார சாத்து சாத்துன்னு சத்துது…
அடுத்து, எங்கயோ இருந்த எமி ஜாக்சன, லபக்னு இழுத்து கபாளீகரம் செய்யப் பாக்குது நியூ சிட்டி… எப்பா கபாலி கொஞ்சம் பாத்துப்பா…
கள்ள உறவு தப்பில்லன்னு மோதி மன்றம் சொன்னாலும் சொன்னாங்க.., ஒரு ரோபோ கூட நாட்டுல நிம்மதியா நடமாட முடியல…
மாயா கிருஷ்ணன்.. உங்க லீலை தானா.. பேரு கூட பொருத்தமா தான் இருக்கு உங்களுக்கு…
அடுத்து ஓல்ட்சிட்டி பயந்து ஓடுது. அடுத்து புது சிட்டி அக்ஷய துணி துவக்கிற மாறி தொவச்சி எடுக்குது.
செத்தாண்டா சேகருன்னு சந்தோசமா கைய தட்டுது. அவ்ளோ சீக்கிரத்துல கதய முடிச்சிரலாம்னு பாத்தியான்னு… மொரட்டு பில்லர தூக்கி சிட்டிய வெளு வெளுன்னு வெளுக்குது…
பதிலுக்கு சிட்டியும் ஒரு பில்லர தூக்கி…. அக்ஷய சாத்த, விராட்கோலியும்… எம்.எஸ்.தோனியும் பேட்ட வச்சி சண்டை போட்ற மாதிரியே இருக்கு….
அக்சய் மார்ல ஓங்கி ஒரே குத்து, கைய உள்ள விட்டு கொடல உருவ, பட்டுன்னு படுத்துட்டாப்ல அக்சய்…
அடுத்து எமி கைல இருந்து ஒரு மூணு ஓட்ட நீளமா நீண்டுட்டே வருது… ஒருவேள சிட்டிக்கு, எமி கிரின் சிக்னல் கொடுத்துடுச்சு போல… அப்புறம் என்ன சிட்டி உன் வித்தையை காட்டு….
எமிய பாத்து பாத்து செதுக்கிருக்காப்ல… நம்ம ரோபோ சங்கரு… ஐ படத்துலவே மெரசலாயிட்டேன் சாங்ல… இதுக்காக தான் ஒத்திகை பாத்திருப்பாரு போல…
அடுத்து மிலிட்டரி பாய்ஸ் என்ட்ரி. அடுத்து எந்திரன் ரொபோ, அக்ஷய.. சுடத் தெரியாம சுடுது.. அர்னால்ட் கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துட்டு வா சிட்டி…
அப்புறம் நம்ம அக்ஷய யாரோ சொழட்டி அடிக்குறாங்க. வேற யார இருக்கும் நம்ம சூப்பர் ஹீரோ புது சிட்டி தான்.
செல்போன வச்சு.. சொவர எழுப்பி… ஸ்டேடியத்துல இருக்கவன் அம்புட்டு பேரவும்.. அடச்சு வச்சு… நோ எக்சிட்னு டிஸ்ப்ளே பண்ணி… அக்சய கதற விடுராப்ல.
கழுகு பாஞ்சு பறக்குது, உயர பறக்குது, டிசைன் டிசைனா பறக்குது… அப்டியே படத்தோட டைட்டில் வந்திடுச்சு…
தீபாவளி சரவெடி வெடிக்குற மாதிரி, சிட்டி பண்ணுற அளப்பர இருக்கே, மொத்த துப்பாக்கியவும் ஒண்ணா வச்சு.. வளச்சு வளச்சு சுடுது… இதுக்கு எதுக்கு 2.0 சிட்டி, எந்திரன் சிட்டியே சோக்கா சுடுமே…
ஒரு வழியா முடிஞ்சின்னு பாத்தா… வசிகரன் மூஞ்சி டக்குனு அக்ஷய் குமாரா மாற… ஓல்ட் சிட்டி ஷாக்.
அதான் முன்னமே சொன்னேல, வசீகரன போட்டுட்டு…, வசீகரன் வேசத்துல சிட்டியவும் போட்ற சீன்…கெத்த இன்டெர்வெல் பிளாக் வரப்போது இந்த சீன்ல. நெக்ஸ்ட் எமி புது சிட்டிய உருவாக்கும். இதான் படத்தோட செகன்ட் ஆப்….