Home Latest News Tamil கன்னித்தீவும் ரஜினி பெற்ற கன்னிகளும்..!

கன்னித்தீவும் ரஜினி பெற்ற கன்னிகளும்..!

728
0

கன்னித்தீவும் ரஜினி பெற்ற கன்னிகளும்..!

ரஜினிக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் ஐஸ்வர்யா. இரண்டாவது மகள் சவுந்தர்யா. ஐஸ்வர்யாவும் சிம்புவும் காதல் வயப்பட்டனர். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

சிம்பு, ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் லதா ரஜினிகாந்த் மூவரும் போனில் உரையாடிய ஆடியோ இணையத்தில் வைரலாகி, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இருவரது காதலும் முற்றுப்பெற்றது.

அதன்பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ல் திருமணம் செய்துகொண்டனர். ஐஸ்வர்யாவின் தங்கை சவுந்தர்யா. சவுந்தர்யாவிற்கும் அஸ்வின் ராம்குமாருக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது.

அஸ்வின், கே.எஸ்.வெங்கட்ராமன் அவர்களின் பேரன். கே.எஸ்.வெங்கட்ராமன், கே.எஸ்.வி. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர்.

தற்பொழுது, கே.எஸ்.வி. கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜிங் டைரக்டர் அஸ்வின் ராம்குமார். மேலும் சொந்தமாக ப்ரோ மேனேஜ் என்ற நிறுவனத்தை துவங்கி, சி.இ.ஓ.வாக பணியாற்றிவருகின்றார்.

சவுந்தர்யா மற்றும் அஸ்வின் தம்பதிகளுக்கு வேத் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த சில மாதங்களிலேயே மனகசப்பு ஏற்பட்டது. 2017-ல் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

சவுந்தர்யா தற்பொழுது விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஷாகன் அபெக்ஸ் என்ற மருந்து கம்பெனி முதலாளியின் மகன். இவர் வஞ்சகர் உலகம் என்ற படத்தில் இரண்டாவது நாயகராக நடித்துள்ளார். இவருக்கு சிறுவயது முதலே சினிமா மீது மோகம்.

பார்டி, பப் என சுற்றியபோது சவுந்தரியாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது திருமணம் வரை சென்றுள்ளது. விஷாகனும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

தினகரன் பத்திரிக்கையின் நிறுவனர் கே.பி.கந்தசாமியின் பேத்தியை விஷாகன் முதலாவதாக திருமணம் செய்துகொண்டார்.

கே.பி.கந்தசாமியின் மகன் கே.பி.கே.குமரன். கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கம். திமுக கட்சியில் முக்கிய பதவியில் உள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள். கனிகா குமரன் மற்றும் சரஸ்வதி குமரன்.

கனிகா குமரன், விஷாகனின் முதல் மனைவி மற்றும் பேஷன் என்ற பத்திரிக்கையின் தலைவர். விஷாகன் மற்றும் கனிகா குமரன் இருவரும் மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இந்த விவாகரத்திற்குப்பின் கனிகா குமரன், வருண் மணியன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

வருண் மணியனும், த்ரிஷாவும் முன்னாள் காதலர்கள். இருவரும் தனி விமானத்தில் ஹாயாக வலம் வந்தனர். நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்தது. ஆனால், திடீரென திருமணம் நடைபெறவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர்.

வருண் மணியன், ரேடியன் மீடியா குரூப் மேனேஜிங் டிரைக்டர். இவர் தயாரித்த முதல் படம் ‘வாய மூடி பேசவும்’. அந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்.

பாலாஜி மோகனின் அடுத்த படம் மாரி. மாரி படத்தின் நாயகன் தனுஷ். மாரி படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படம் தங்கமகன். தங்க மகன் படத்தின் இயக்குனர் வேல்ராஜ். வேல்ராஜ் தனுசை வைத்து இயக்கிய முதல் படம் வேலையில்லா பட்டதாரி.

அப்படத்தின் வில்லன் பெயர் அஸ்வின். அந்த காதாப்பாத்திரம் சவுந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் ராம்குமாரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். நிஜ வாழ்கையில் அஸ்வின் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் ஓனர். தாத்தா துவங்கிய நிறுவனத்தின் எம்.டி.

படத்திலும் அதே போன்ற காட்சி அமைப்புகள் இடம்பெற்று இருக்கும். தனுஷ் அந்த காதபாத்திரத்தை அமுல்பேபி எனக் கூப்பிட்டு அளவில்லா களிப்படைவார்.

அப்படத்தில் நடிகை சுரபி சிகரெட் மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உடல் உறுப்பு பாதிக்கப்படுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அது சவுந்தர்யாவின் நிஜவாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் என அப்போது பேசப்பட்டது.

வேலையில்லா பட்டதாரி படம் வெளிவந்த சில நாட்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதற்கு தனுஷ் தான் காரணமாம். சவுந்தர்யா மற்றும் தனுஷின் செயல்கள் அஸ்வினுக்கு பிடிக்கவில்லை.

ராதிகா வீட்டில் நடந்த பார்டியில், தனுஷுடன் அடித்த லூட்டியை கேள்விப்பட்டதும் அஸ்வின் விவாகரத்து செய்வதென்று முடிவு செய்துவிட்டார்.

விவாகரத்து பெற்ற அதே வருடத்தில், வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளிவந்தது. அதை இயக்கியவர் சவுந்தர்யா.

வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு முன், கொடி படத்தில் நடித்தார். அந்த படத்தின் நாயகி த்ரிஷா.

டிசம்பர் 2015-ல் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் வருணும் த்ரிஷாவும் பிரிந்தனர்.

அதற்கு காரணம், நிச்சயதார்த்த பார்ட்டிக்கு சினிமா பிரபலங்களை யாரும் அழைக்கக்கூடாது என வருண் கூறியுள்ளார். ஆனால் த்ரிஷா அதைப் பொருட்படுத்தாமல் தனுஷை பார்ட்டிக்கு கூட்டி வந்து லூட்டியடித்துள்ளார்.

அதன்பிறகே திரிஷாவும் தனுஷும் முதல் முறையாக ஜோடியாகஇணைந்து கொடி படத்தில் நடித்தனர். நீண்ட நாட்களாக த்ரிஷாவிற்கு ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்பது ஆசை.

அந்த ஆசையையும் தற்போது தனுஷ் நிறைவேற்றி வைத்துவிட்டார். பேட்ட படத்தில் த்ரிஷா நடிக்கின்றார்.

த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியன், விஷாகனின் முதல் மனைவி கனிகா குமரனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

கனிகா குமரனால் கழற்றிவிடப்பட்ட விஷாகனை சவுந்தரியா திருமணம் செய்ய உள்ளார். சவுந்தர்யாவால் கழற்றிவிடப்பட்ட அஸ்வின், கடந்த மார்ச் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

Previous article2.0 Official Trailer Fun Review | Shankar | Rajini | Amy | A.R.R
Next articleKaatrin Mozhi Moive Review | காற்றின் மொழி திரை விமர்சனம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here