Home Latest News Tamil தமிழ்நாட்டில் 817 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் 817 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

320
0
தமிழ்நாட்டில் 817 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் 817 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா நோய் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை: நேற்று புதிதாக 817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது என்பதை சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று தமிழகத்தில் 567 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9,099 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று சென்னையில் மட்டும் 558 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை 12,203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் 4, செங்கல்பட்டு 31, கடலூர் 2, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 14, மதுரை 1,  நாகப்பட்டினம் 1, ராமநாதபுரம் 1, தஞ்சாவூர் 1, திருப்பத்தூர் 1,

திருவண்ணாமலை 13, திருவாரூர் 5, தூத்துக்குடி 2,  திருச்சி 3 என தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

உலகளவில் இதுவரை 56,14,458  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 3,50,958 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் அதிகப்படியாக 17,24,416 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Previous article28/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleஇந்தியாவை அச்சுறுத்தும் அடுத்த பேராபத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here