Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவை அச்சுறுத்தும் அடுத்த பேராபத்து

இந்தியாவை அச்சுறுத்தும் அடுத்த பேராபத்து

237
0

இந்தியாவை அச்சுறுத்தும் அடுத்த பேராபத்தாக மாறிவரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்பது பெரும் சவாலை இந்தியா எதிர்கொள்ளப்போவதை உணர்த்துவதற்காகவே உள்ளது.

இந்தியா: இந்தியாவில் கொரோனாவிற்கு அடுத்து வெட்டுக்கிளிகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த லோகஸ்ட் ஸ்வர்ம் (locust swarm) எனப்படும் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா என்னும் நோய் தொற்றை எதிர்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களில் திடீரென பரவி விளைநிலங்களை பெருமளவில் சேதப்படுத்தி வருகின்றன வெட்டுக்கிளிகள்.

பொதுவாகவே வெட்டுக்கிளிகள் தனித்தனியாக நிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஆபத்தில்லாத உயிரினங்கள் தான். ஆனால் இவை வறட்சி காலங்களில் பசுமையான இடங்களில் அதிகளவில் உணவு தேடி சேர்கின்றன.

அந்த சமையத்தில் அவற்றின் நரம்புமண்டலங்கள் தூண்டப்பட்டு செரட்டோனின் அதிகளவில் அவற்றின் உடலில் சுரக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் ஆபத்தானவையாக அச்சுறுத்துகின்றன.

செரட்டோனின் அதிகளவில் சுரக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் குணநலன்களில் பெரியளவில் மாறுதல் அடைந்து அவற்றின் உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அனைத்திலும் மாற்றமடைகின்றன.

இந்த சமையத்தில் இவற்றிற்கு சரியான ஈரப்பதமும், ஈரமண்ணும் அமைந்தால் இவை அதிகளவில் முட்டையிட்டு எண்ணிக்கையில் பெருகுகின்றன. அவ்வாறு வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவம், நிறம், மூளை அளவு என மாற்றம் பெறுகின்றன.

பெற்றோரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் திறன் பெற்றவையாக உருமாறி பெரும் அழிவு சக்தியாக அச்சுறுத்தும். இவை அதிகளவில் உண்ணக்கூடியவை

தம் கண்ணில் படும் அனைத்து பசுமையான தாவரங்களையும் அழித்து உண்டபடி தொடர்ந்து நகர்ந்துகொண்டே செல்லும். ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பயணிக்கக்கூடியவை.

இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் என்பது கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மிகப்பெரிய தாக்குதல் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வெட்டுக்கிளிகள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவு என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Previous articleதமிழ்நாட்டில் 817 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி
Next article29/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here