Jaya Prada Birthday; ரஜினி, கமல் உடன் ஜோடி சேர்ந்த நடிகை ஜெயபிரதா பர்த்டே டுடே! ரஜினிகாந்த், கமல் ஹாசன் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெயபிரதா இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை ஜெயபிரதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் கடந்த 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிறந்தவர் நடிகை ஜெயபிரதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், கே பாலசந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மன்மத லீலை படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் டப் செய்யப்பட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து கமல் ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்தார். மேலும், 47 நாட்கள், சலங்கை ஒலி, ஏழை ஜாதி, தசவதாரம், கேணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இருந்த ஜெயபிரதா அந்தக் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். 2004 பொதுத் தேர்தலின்போது உத்திரப்பிரதேசத்தின் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பாக நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெயபிரதா மேடம்…