Home சினிமா கோலிவுட் FEFSI: ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி!

FEFSI: ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி!

280
0
FEFSI AGS Donation

FEFSI, AGS Entertainment; ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி! கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

பெப்சி தொழிலாளர்களுக்கு ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 83 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.  மேலும், 3,219 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவி செய்யுமாறு பெப்ஸி (FEFSI) அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஜெகன் என்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்களான கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களது பட்டியலில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார். ஆம், லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா பெப்ஸி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பெப்சி டிரஸ்ட் அக்கவுண்டில் ரூ.15 லட்சத்தை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதற்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

SOURCER SIVAKUMAR
Previous articleநடிப்பின் நாயகன் சியான் விக்ரம் படங்கள்!
Next articleபங்குனி உத்திரம்: இத்தனை கடவுள்களுக்கும் இந்த ஒரு நாளில் நிகழ்ந்த அற்புதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here