ஏப்ரல் 1 காலை 10 மணி முதல் ஊரடங்கு வாபஸ் – மோடி: பாலிமர் வீடியோ பரபரப்பு. april fools pranks jokes polimer video. இப்படி ஒரு வீடியோ உலா வருகிறது.
மக்களை எப்படியாவது ஏப்ரல் 1 முட்டாள் ஆக்கியே தீருவேன் என சில முட்டாள்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 1
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமா?. இதை முட்டாள்கள் தினம் என நினைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்த தினத்தில் யாரையாவது ஏமாற்றினால் தான் நிம்மதியாகத் தூக்கம் வரும்.
அதே நேரத்தில் யாரிடமும் ஏமாறக்கூடாது என சிலர் விழிப்புடன் இருப்பார்கள். அதையும் மீறி அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதில் தான் இந்த தினமே உலக அளவில் சுவாரஸ்யம் அடைந்தது.
90’s ஏப்ரல் பூல்
அதோ பார் காக்கா, ஓட்டு மேல நரி இப்படி கூறியவுடன் டக்கென திரும்பி பார்பவர்கள் ஏமாறுவார்கள். அவர்கள் ஏப்ரல் பூல் செய்யப்படுவார்கள்.
தற்பொழுது உள்ள காலமோ மாறிவிட்டது. இன்று காலை முதலே என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஏகச்சக்க ஏப்ரல் பூல் வீடியோக்கள் வந்தது.
அதில் ஒரு பெண் தொடை வரை கட்டிக்கொண்டு தூங்குவது போல் வீடியோ பார்த்த உடனே, அது ஆண் எனக் கண்டுபிடித்துவிட்டேன். இறுதியில் நான் நினைத்தது போலவே ஏப்ரல் பூல் வீடியோ.
ஊரடங்கு உத்தரவு வாபஸ்
அடுத்து சில மணி நேரத்தில், ஏப்ரல் 1 காலை 10 முதல் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெற்று விட்டதாக மோடி அறிவித்தார் என பாலிமர் டிவி பிளாஸ் நியூஸ் வீடியோ ஒன்று வந்தது.
நான் செய்தியாளர் என்பதால் வீடியோவை முழுவதுமாகக் கூடப் பார்க்காமல் அதை பற்றிய செய்தியை இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.
அப்படி ஒன்று வெளியாகவில்லையே என உண்மையில் அது பாலிமர் வீடியோ தானா என மீண்டும் பார்த்தேன். வீடியோ இறுதியில் ஏப்ரல் பூல் சொல்கிறார் சார்லி.
இது முக்கியமா?
விளையாடுவதற்கும் ஒரு எல்லை உண்டு. என்னைப்போல் வீடியோவை இறுதிவரை பார்க்கமால் வெளியில் செல்லலாம் என நினைத்து மக்கள் கிளம்பி விட்டால் என்ன செய்வது?
போலீசாரிடம் அடி வாங்க வேண்டும். அதே கொரொனோ தொற்று உள்ளவர் உலா வந்தால் மீண்டும் கொரோனா சமூகப் பரவலாக மாறிவிடும்.
ஏப்ரல் பூல் செய்து மகிழுங்கள் அதற்கு என கொரோனாவை வைத்து ஏப்ரல் பூல் செய்வது நியாமற்ற ஒன்று. உங்களை முதலில் கொரோனா வைரசை வைத்து அழிக்க வேண்டும். அப்போது தான் வதந்திகள் பரவுவதை தடுக்கமுடியும்.