சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,403 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 88 பேர் கொரோனாவிற்கு பலியாகினர். தமிழகத்தில் இன்று மட்டும் 4807 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,65,714ஆக உள்ளது.
கோவிட்-19 பரவல் மையமாக கருதப்படும் சென்னை
கோவிட்-19 பரவல் மையமாக கருதப்படும் சென்னையில் மட்டும் 32 கொரோனா இறப்புகள் இன்று பதிவானது. சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு(2), காஞ்சிபுரம்(5), திருவள்ளூர்(7) ஆகிய பகுதிகளில் 14 பேர் கொரோனாவால் இறந்தனர்.
சென்னையில் 1,219 புதிய தொற்றுகள் இன்று உறுதியானது
சென்னையில் 1,219 புதிய தொற்றுகள் இன்று உறுதியானது. செங்கல்பட்டு(323), காஞசிபுரம்(97) மற்றும் திருவள்ளூர்(370) ஆகிய பகுதிகளில் மொத்தமாக 790 புதிய தொற்றுகள் உறுதியானது.
கொரோனாவால் 6 பேர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.
மதுரையில் 185 புதிய கொரோனா தொற்று
மதுரையில் 185 புதிய கொரோனா தொற்று உறுதியானது மற்றும் 9 பேர் கொரோனாவால் இறந்தனர். தேனியில் 144 தொற்றுகள் உறுதியானது மற்றும் 4 பேர் கொரோனாவால் இறந்தனர். இராமநாதபுரத்தில் 67 புதிய தொற்றுகள் உறுதி மற்றும் 4 பேர் இறந்தனர்.
பல மாவட்டங்களில் 100க்கும் மேல் புதிய கொரோனா தொற்றுகள்
மேலும் பல மாவட்டங்களில் 100க்கும் மேல் புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.கடந்த 24 மணிநேரத்தில் 3,049 பேர் குணமடைந்தனர் மற்றும் 49,452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.