கொரோனா தடுப்பூசி கண்டறிந்த அமெரிக்கா; முதல் பரிசோதனை இன்று
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 150000க்கும் மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 5000க்கும் மேலான உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளனர்.
இதற்கு தடுப்பூசி கண்டறிய உலகம் முழுவதும் போட்டி போட்டு இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் இதற்கு தடுப்பூசி கண்டறிந்த அமெரிக்கா இன்று முதல் பரிசோதனை செய்ய உள்ளது.
ஓரிரு மாதத்திற்கு மக்களை பாதுக்காப்பில் வைக்கவே இது உதவுமாம். மேலும் இவை அனைத்துமே பரிசோதனை நிலையில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வர இரண்டு ஆண்டுகள் வரை ஆகுமாம்.
இன்று கொரோனா பாதிப்பு இல்லாத நபருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர். மேலும் இதனால் எந்த வித பக்க விளைவு வராது என உறுதியாக கூறியுள்ளனர்.