மராட்டியம்: ஞாயிற்று கிழமை 5,493 புதிய கொரோனா தொற்றுகள் மராட்டியத்தில் உறுதி செய்யப்பட்டன. இதுவரை மராட்டிய மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று 1,64,626 ஆக உள்ளது.
குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 86,575 பேர் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் 70,607.
மும்பையில் அதிக கொரோனா தொற்று
மராட்டிய தலைநகர் மும்பை இந்தியா மற்றும் அம்மாநில தொற்றில் அதிக கொரோனா தொற்றாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இன்று மட்டும் 1,287 புதிய தொற்றுகள் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டன, மும்பையின் மொத்த கொரோனா தொற்று 75,539. இங்கு இன்று புதிதாக 23 பேர் கொரோனா பாதிப்பால் இறந்தனர்.
மும்பையின் மொத்த கொரோனா இறப்பு 4,371
மும்பையின் மொத்த இறப்பு 4,371 ஆக உள்ளது. மும்பையில் 28,006 பேர் சிகிச்சையிலும் 43,154 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர்.