என் வாழ்நாளில் நான் மிகவும் வருத்தப்பட்ட ஒரே நிகழ்வு இது தான்: தோனி உருக்கம்
என்னுடைய வாழ்நாளில் நான் பட்ட கஷ்டங்களில் மேட்ச் பிக்ஸிங்க் சர்ச்சை தான் மிகவும் கடினமான ஒன்று என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
இன்று நான் இருக்கும் இந்த உயரத்திற்கு கிரிக்கெட் தான் முழுக் காரணம். என்னைப் பொறுத்தவரை, கொலையை விட மிகப்பெரிய குற்றம் மேட்ச் பிக்சிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை அதாவது 2008 முதல் 2019 வரை தோனி தான் கேப்டன். தோனி என்றாலே தமிழ்நாட்டில் தனி பெயரும் புகழும் உண்டு.
இடையில் கடந்த 2013-ல் நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுப்பட்ட புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
2018-ல் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்பியன் பட்டம் வென்றது.
வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் கூட்டம் தோனிக்கு உள்ளது. உலகிலயே மிகவும் வெற்றிகரமான டி20 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் முதலிடம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பாட் பிக்சிங் பற்றி ‘ரோர் ஆப் தி லயன்’ ஆவணப்படம் இன்று முதல் இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.
இன்று ஹாட்ஸ்டாரில் ‘ரோர் ஆப் தி லயன்’ தொடர் ஐந்து எபிசோட்கள் கொண்ட சீஸன் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தனது முழு உணர்வுகளையும் தோனி வெளிப்படுத்தினார்.