பீர் குடித்தால் கொரோனா பரவாதாமே? – WHO விளக்கம். கொரோனா பீர் (corona beer) என்ற பெயரில் உள்ள மது குடித்தால் வைரஸ் பரவாது என ஒரு செய்தி பரவி வருகிறது.
கொரோனா
கொரோனா வைரஸ் சைனாவில் பரவ ஆரம்பித்த காலம் முதலே நான் மருந்து கண்டுபிடித்து விட்டேன் என ஒரு கூட்டமே கிளம்பியது.
எந்த எந்த நாட்டில் எல்லாம் இப்படி காமெடி செய்தனரோ அந்த நாட்டில் எல்லாம் தற்பொழுது கொரோனா பரவிவிட்டது.
மருந்து கண்டுபிடித்த அந்த ஆசாமிகளை தான் காணவில்லை. இது மட்டுமல்ல கொரானா பற்றி எக்கச்சக்க வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
CORONA BEER
கொரோனா பீர் என்ற ஒரு நிறுவனம் மது தயாரித்து வருகிறது. இதை அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது, சரக்கடித்தால் கொரோனா பரவாது எனத் தகவல் பரவியது.
இதற்கு உலக சுகாதார நிறுவனம் WHO விளக்கம் அளித்து உள்ளது. மது அருந்தினால் கொரோனா பரவாது என நம்பி கொரோனா வைரஸ் உள்ளவர்களிடம் செல்ல வேண்டாம்.
கொரோனா எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் பரவும் என உலக சுகாதார நிறுவனம் அனைவரையும் எச்சரித்து உள்ளது.