Home சினிமா கோலிவுட் ஃபேமிலி குறும்படம்: வீட்டில் இருந்தபடியே படப்பிடிப்பா? இதுவும் நல்லாதான் இருக்கு!

ஃபேமிலி குறும்படம்: வீட்டில் இருந்தபடியே படப்பிடிப்பா? இதுவும் நல்லாதான் இருக்கு!

283
0
Family ShortFilm

Family ShortFilm; வீட்டில் இருந்தபடியே படப்பிடிப்பா? இதுவும் நல்லாதான் இருக்கு! சினிமா பிரபலங்கள் பலரும் ஃபேமிலி குறும்படம் என்ற தலைப்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பேமிலி என்ற குறும்படம் மூலம் பிரபலங்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக சாதாரண நடுத்தர மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தபடி பிரபலங்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ஃபேமிலி குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் முன்வந்துள்ளனர்.

இதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மம்முட்டி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

Family ShortFilm

இந்த ஃபேமிலி குறும்படத்தை இயக்குநர் ப்ரசூன் பாண்டே இயக்கியுள்ளார். இந்த நிலையில், இந்த ஃபேமிலி குறும்படத்தில் மம்மூட்டி நடித்த காட்சியை அவரது மகன் துல்கர் சல்மானே படமாக்கியுள்ளாராம்.

ஏற்கனவே துல்கர் சல்மானுக்கு தனது அப்பாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதனை தற்போது இந்த ஃபேமிலி குறும்படம் மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleமனிதநேயம் உள்ள மனிதன்: ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!
Next articleதலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் ரெடியான ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 கன்பார்ம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here