ஃபானி புயல் வருகையை ஒட்டி தமிழகத்தில் கோடை மழை துவங்கியுள்ளது. இருப்பினும் புயலின் சீற்றம் தமிழகத்தை பாதிக்குமா எனக் கேள்வியும் எழுந்துள்ளது.
Fani Cyclone Name Meaning (bani, Paani)
ஃபானி புயல் என்ற பெயரை பங்களாதேஷ் நாடு தேர்வு செய்துள்ளது. பானி (bani) என்ற வார்த்தை ஹிந்தி மொழியில் இருந்து உருவாகியது.
பானி (paani) என்றால் தண்ணீர். வட மொழிகளில் பெரும்பாலும் தண்ணீரை பானி என்றே குறிப்பிடுகின்றனர். வங்கதேசத்திலும் பானி என்றே குறிப்பிடுவர். எனவே இதற்கு ஃபானி என பெயரிட்டுள்ளனர்.
பானி புயலால் தமிழகம் பாதிக்குமா?
பானி புயல் முதலில் பாண்டிச்சேரி வழியாக கரையைக்கடந்து சென்னை நோக்கி நகர்ந்து ஆந்திராவிற்கு சென்று வலுவிழக்கும் எனக் கணிக்கப்பட்டது.
ஆனால், தற்பொழுது தமிழக கடற்கரையை ஒட்டியே சென்று நேராக ஆந்திராவில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
50 ஆண்டுகள் கழித்து இந்தியா வரும் புயல்
பொதுவாக ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் பர்மா, தாய்லாந்து நாடுகளை நோக்கியே செல்லும்.
50 ஆண்டுக்கு முன்பு ஒரே ஒரு புயல் மட்டுமே தமிழகம் வந்தது. அதேபோல் இந்த பானி புயலும் தமிழகம் நோக்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Fani Storm Live Tracking – Fani Cyclone Live Updates
storm radar map live