நிலவில் தாவரம்: வாயடைத்துப்போன உலக விஞ்ஞானிகள்!
விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரச் செடி முளைக்க வைக்கப்பட்டுள்ளது.
‘தி மார்சின்” படத்தில் ஒரு காட்சி இருக்கும். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஹீரோ அங்கேயே சிக்கிக்கொள்ள நேரிடும்.
இதனால் உணவுக்காக உருளைக்கிழங்கை முளைக்க வைத்து அதை உண்டு உயிர் வாழ்வார்.
இதேபோன்று விண்வெளி கிரகங்களில் தாவரங்களை முளைக்க வைக்கும் முயற்சியை பல நாடுகள் மேற்கொண்டது. எல்லா நாடுகளின் முயற்சிகளுமே தோல்வியில் முடிந்தது.
தற்பொழுது சீனா விஞ்ஞானிகள் நிலவில் தாவரத்தை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.
சாங்-இ4 என்ற ரோபோ ஆய்வு விண்கலம் மூலம், நிலவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தாவர விதைகள் முளைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
நிலவில் முதன்முதலில் உயிரின வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக விஞ்ஞானிகள் அனைவரும் சீனாவின் முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
நிலவின் இருளான பகுதியிலேயே இந்த முயற்சியை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். இந்த முயற்சி செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கு உதவும்.
ஜனவரி 3-ம் தேதி நிலவில் தரையிறங்கிய சீனாவின் விண்கலத்தில் பருத்தி விதை, உருளைக்கிழங்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஈஸ்ட் மற்றும் பழ ஈக்களின் முட்டை அடங்கிய மண்ணில் இந்த விதைகள் முளைக்க வைக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் முதன் முதலில் தோன்றிய தாவரம் என்ற சிறப்பை பருத்திச் செடி பெற்றுள்ளது.