Gaja Puyal – கஜா புயல் வருகையால் எடப்பாடிக்கு ஆப்பு. ஸ்டாலினுக்கு டாப்பு. பழனிச்சாமி பார்வையிடாதது ஏன்?
கஜா புயல் வருவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டன. இதுவரை எந்த ஒரு புயலுக்கும், இப்படி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது கிடையாது.
புயல் வரும் கடைசி நிமிடம் வரை, எல்லோரும் விளையாட்டாக எடுத்துக்கொண்டனர். இவ்வளவு எச்சரிக்கைகளை பார்த்தால், புயல் வரவே வராது என மீம்ஸ்கள் பரந்தன.
ஆனால், கஜா புயலின் கோரத்தாண்டவத்தை பார்த்த பின்பு, அதனின் வீரியம் மக்களுக்கு புரிந்தது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில், நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும்.
இதற்குமேல் தமிழக அரசின் மீதோ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதோ, எந்த குறையும் சொல்ல வாய்ப்பில்லை. எனவே, ஸ்டாலின் யாரும் எதிர்பாராத வகையில், பாராட்டுகளை தெரிவித்தார்.
ஸ்டாலின் பாராட்டியபின் எடப்பாடியை ஊடங்கள் புகழ்ந்து தள்ளின. இது மத்தியில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. ஓவர் நைட்டில் ஒபாமாவாக நினைத்த எடப்பாடியை ஒசாமாவாக மாற்றிவிட்டனர்.
புயல் பாதிப்புகளை, அதிமுகவின் பன்னீர் செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் பார்வையிட்டனர். ஆனால், எடப்பாடி பார்வையிட செல்லவே இல்லை. மோடியை பார்க்க செல்ல உள்ளதாக தகவல்கள் வேறு வந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நற்பெயர் பெற்ற எடப்பாடி, சிங்கக்குட்டி போல் மக்கள் முன்னிலையில் சென்று நற்பெயர் பெற முயன்றார். ஆனால் அவரின் கனவுக்கு ஊதப்பட்டது சங்கு.
இப்படியே விட்டால், எடப்பாடி தனி ஆளாக ஆட்சியை பிடித்துவிடுவார் என்று எண்ணியது மேலிடம். இதனால் எடப்பாடிக்கு ரெட் போட்டுவிட்டது. புயல் பாதித்த திசைபக்கம் கூடத் தலைவைத்துப் படுக்கக்கூடாது என எச்சரிக்கை செய்தது.
மேலும், மீட்பு பணிகளையும் தாமதமாகியது. காலையில் நற்பெயர் மாலையில் அவப்பெயர் கஜா புயலை நினைத்து கடுப்பாகிப்போனார் எடப்பாடி.
இதைத் தெரிந்துகொண்ட ஸ்டாலினுக்கு மிகவும் மகிழ்ச்சி. பாராட்டு தெரிவித்த கையோட பொரிந்து தள்ளிவிட்டார்.
இரும்பு ஊரின் கரும்பு மனிதரை, இரும்பு இதயம்கொண்ட எடப்பாடியே என ஸ்டாலின் கூற,. மீடியாக்களும் எடப்பாடியை வசைபாடியது.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டது, ஏற்கனவே புயலால் பதிக்கப்பட்டு வெந்து, நொந்துபோன மக்களே. எடப்பாடியல்ல!!!