Thimiru Pudichavan Movie Review – திமிரு புடிச்சவன் விமர்சனம்.
விஜய் ஆண்டனி நடிக்கத் தெரியவில்லை என்றாலும், ஹீரோ அந்தஸ்துடன் வலம்வரக் காரணம், கதைத் தேர்வும், குறைந்த பட்ஜெட்டில் தரமாக படமெடுப்பதும் தான்.
விஜய் ஆண்டனியின் முகத்தில் எவ்வித ரியாக்சன்களையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தற்பொழுது நடிப்பில் கொஞ்சம் தேறி வருகின்றார்.
அதே சமயம், இனி அவர் ஹீரோவாக நிலைப்பது கடினம். காரணம் அதே கதைத் தேர்வு தான். சமீப காலமாக அவருடைய கதைத் தேர்வு மிகவும் மட்டமாக உள்ளது.
திமிரு புடிச்சவன் படம் விஜய் ஆண்டனியின் மிக மோசமான படங்களில் முதல் இடத்தைப் பிடித்து விட்டது.
ஆந்திராவில் கூட இதுபோன்ற படங்கள் எடுப்பதை குறைத்துகொண்டு விட்டனர். தமிழ் சினிமாவில் இப்படியான படங்கள் வெளியாவது வேதனையான விஷயம்.
படத்தின் இயக்குனர் கணேஷா அவர்களே, முதலில் ஒரு நல்ல ஷார்ட் பிலிம் எடுத்துப் பழகிவிட்டு பிறகு பெரிய படங்கள் எடுக்க வரவும்.
நிவேதா பெத்துராஜ் உங்களோட வளர்ச்சி நடிப்புல மட்டும் இல்ல, உடலிலும் நன்கு தெரிகின்றது. என்ன தான் மதுரை பொண்ணா இருந்தாலும் சினிமான்னு வந்துட்டா சும்மாவா விடுவாங்க…
காமெடியே இல்லாமல், ஒரு ஹீரோயினை வைத்து காமெடிகள் நகர்கின்றது. உன்னை மாற்றிக்கொள் உலகம் மாறிவிடும் நல்ல பாடல். அந்த பாடலில் இருந்த பீலிங் கூட படத்தின் ஒரு காட்சியிலும் இல்லை.
விஜய் ஆண்டனி நடித்துப் பழக வேண்டும் என்பதற்காக இப்படத்தை தேர்வு செய்தாரா? இல்லை கணேஷா இயக்கி பழக வேண்டும் எனத் தேர்வு செய்தாரா?
கருத்து சொல்லுவதற்குமுன் கருத்தாக படம் எடுக்க கற்றுக்கொண்டு வரவும். அரைகுறையாக வாய்ப்புகளை பயன்படுத்துவது, ஒரு தயாரிப்பாளரை கொள்ளும், படம் பார்க்க வருபவர்களை கொள்ளும்.
விஜய் ஆண்டனி, மத சாயலை பூச முயல்கின்றார் என இப்படம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
கிறிஸ்தவர்களை பற்றி தரக்குறைவாக காட்சிகளை வைப்பது. இஸ்லாமியர்கள் மீது பாசம் காட்டுவது. முருகராய் மாறி இந்துக்களை உயர்த்துவது.
இப்படி நீங்கள் இந்து, முஸ்லீம்கள் மனதில் இடம் பிடிப்பதற்கு பதில், இசையமைத்தே காலத்தை கடத்திவிடலாம்.
ஜாதி, மதங்களை அழிக்க வேண்டிய காலகட்டத்தில் அதை வைத்துப் பிழைப்பு நடத்த முயல்கின்றீர்கள்.