Home சினிமா ஹாலிவுட் சினிமா கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 2 ரீவைண்ட்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 2 ரீவைண்ட்

357
0

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 2 ரீவைண்ட்

டிரியன் லானிஸ்டர் வருகை 

முதல் சீஸனில் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் டல்லி ராஜ்ஜியத்திடம் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வார் டிரியன் லானிஸ்டர்.

தனது பேச்சுத் திறனாலும் புத்திசாலித்தனத்தாலும் அங்கிருந்து தப்பித்து, ப்ரான் என்பவரின் உதவியோடு கிங்க்ஸ் லேண்டிங் வந்தடைகிறார் டிரியன் லானிஸ்டர்.

இவர் செர்சி லானிஸ்டருக்கும் ஜேமி லானிஸ்டருக்கும் உடன் பிறந்த சகோதரர். கேம் ஆஃப் த்ரோன்ஸைப் பொறுத்தவரை யார் நல்லவர், யார் கெட்டவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், லானிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்த டிரியன் ரொம்பவே நல்லவர்தான்.

ஜோரா மொர்மோண்ட் ஆறுதல் 

எஸ்ஸோஸில் கல் டிராகோ இறந்த பிறகு, ஒட்டுமொத்த டோத்ராக்கி மக்களும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். வெவ்வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுவிட்டதால், படை பாதியாகிவிடும்.

டினேரியஸ் டார்கேரியன் சாவை வென்று, மூன்று டிராகன்களுக்கும் உயிர் கொடுத்ததையடுத்து, சிறிது டோத்ராக்கி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பார்.

தனது பயணத்தின்போது ஏற்படும் வறட்சியால் மக்கள் இறப்பார்கள், குதிரைகள் சிலவும் இறந்துபோகும். இந்தச் சூழலில், டினேரியஸ் டார்கேரியனுக்குத் தைரியம் சொல்லும் ஒரே ஆள், ஜோரா மோர்மன்ட்.

அரியணைக்கு ஆசைப்படும் ஸ்டான்னிஸ் பாராத்தியன் 

இறந்த மன்னர் ராபர்ட் பராத்தியனின் உடன் பிறந்த சகோதரர். ராபர்ட் பராத்தியனுக்காகப் பல போரில் சண்டையிட்டுள்ளார். இருப்பினும், ஆட்சிமேல் இருக்கும் ஆசையில் இருவருக்கும் எப்போதுமே சண்டைதான்.

நிகழ்காலத்தில் ராபர்ட் பராத்தியனின் இறப்புச் செய்தி கேட்டு, `இதுதான் அரியணையில் அமர சரியான தருணம்’ எனத் தனது படைபலத்தைப் போருக்குத் தயார்படுத்தத் தொடங்குவார் ஸ்டானிஸ் பராத்தியன்.

மெலிஸாண்ட்ரேவின் ப்ளாக் மேஜிக்

மெலிஸாண்ட்ரேவின் ப்ளாக் மேஜிக்கைப் பயன்படுத்தச் சொல்லி ரென்லி பராத்தியனைக் கொன்றுவிடுகிறார் ஸ்டானிஸ் பராத்தியன். இதை அவரின் பாதுகாவலரான ப்ரையின் டார்த்தான் செய்தார் என்று அவரைக் கொல்ல வருவார்கள், ரென்லி பராத்தியனின் விசுவாசிகள்.

ஜான் ஸ்னோ-இக்ரீட் சந்திப்பு  

நைட்ஸ் வாட்ச் ராணுவம் ஒயில்டுலிங்ஸ் இனத்தை அழிப்பதற்காக அவர்களது இருப்பிடம் நோக்கிப் பயணப்படும்போது, இக்ரிட் என்ற ஒயில்டுலிங் ஜான் ஸ்நோவிடம் மாட்டிக்கொள்வார்.

பெண் என்பதால் அவரை விடுவிக்கக் கோரும் முயற்சியில் நைட்ஸ் வாட்ச்சுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடும். இதனால், அங்கிருந்து இக்ரிட்டை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார் ஜான் ஸ்நோ.

பிரான் ஸ்டார்க் கனவு 

ப்ரான் ஸ்டார்க் கனவில் சில விஷயங்களைப் பார்ப்பார். அவையெல்லாம் வருங்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள். இதுபோன்று எதிர்காலத்தைப் பார்ப்பவர்களை `Three Eyed Raven’ என்று அழைப்பார்கள். இது நடப்பது வின்டர்ஃபெல்லில்.

விண்டெர்பெல்லை கைப்பற்ற நினைக்கும்  தியோன் க்ரேஜாய்

ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த கேட்லின் ஸ்டார்க், ராப் ஸ்டார்க் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். சான்ஸா ஸ்டார்க் கிங்க்ஸ் லாண்டிங்கிலேயே அடைபட்டுக்கிடப்பார்.

ஆர்யா ஸ்டார்க் கிங்க்ஸ் லேண்டிங்கிலிருந்து தப்பித்து நைட்ஸ் வாட்ச் பயணப்பட்டுக்கொண்டிருப்பார். ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச்சில் இருப்பார். இப்படி வின்டர்ஃபெல்லில் யாருமே இல்லாத நிலையில் ஸ்டார்க் குடும்பத்திலிருந்து ப்ரான் ஸ்டார்க் மட்டும் அங்கிருப்பார்.

தியோன் க்ரேஜாய் செய்த துரோகத்தால் தன் பாதுகாவலர் ஓஷோவின் உதவியோடு, ப்ரான் ஸ்டார்க் ஹோடோரோடு வின்டர்ஃபெல்லிலிருந்து தப்பிவிடுவார்.

டிரியன் லன்னிஸ்டரின் யுத்தி 

ஏழு ராஜ்ஜியங்களையும் ஆட்சி செய்யும் கனவோடு மாபெரும் படையைத் திரட்டிக்கொண்டு கடல் வழியே கிங்ஸ் லேண்டிங்கை அடைகிறார் ஸ்டானிஸ் பராத்தியன்.

டிரியன், ஹேண்ட் ஆஃப் கிங்காகப் பதவியேற்ற பின் அரசவையைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருப்பார்.

அப்போது செர்சி லானிஸ்டர் ‘Napalm’ என்ற கெமிக்கலைப் பயன்படுத்தி வெடிகுண்டு மருந்துகளைத் தயாரித்துக்கொண்டிருப்பது தெரியவரும்.

இந்த வெடி மருந்து நிரப்பப்பட்ட கப்பலை எதிரிகளின் கப்பல்களுக்கு இடையே கொன்று சென்று வெடிக்க வைத்து விடுவார். இதில் பெரும்பான்மையான ஸ்டான்னிஸ் பாராத்தியனின் வீரர்கள் இரண்டு விடுவர்.

இதனால் கோபமடையும் ஸ்டானிஸ், மேலும் வீரர்களை கிங்ஸ் லேண்டிங் நுழைவு வாயிலுக்கு அருகே அனுப்பிவைப்பார்.

கொஞ்சக் கொஞ்சமாக ஸ்டானிஸ் பராத்தியனின் போர் வீரர்கள் கிங்ஸ் லேண்டிற்குள் நெருங்க, டிரியனின் படைபலம் மெல்ல அவர்களது நம்பிக்கையை இழந்து தோற்றுவிடும் பயத்தில் ஆழ்ந்திருக்கும்.

நம்முடைய டிரியன்தான் பேச்சில் கில்லியாச்சே?! வீரர்களின் நரம்புகளெல்லாம் மீண்டும் புடைக்கும் அளவுக்குத் தனது பேச்சால் நம்பிக்கையை விதைப்பார்.

இறுதியில் அந்த இடத்தில் கால் பாதிக்கும் டைவின் லன்னிஸ்டர் தான் படையுடன் சண்டை போட்டு ஸ்டான்னிஸ் பராத்தியனை தோற்கடித்து விடுவார்கள். ஆனால் இந்த வெற்றி எதுவும் செய்யாத ஜோஃப்ரீ பராத்தியனையே சேரும்.

அடைக்கலத்திற்காக டிராகனை அடமானம் வைக்கும் டினேரியஸ் 

எஸ்ஸோஸில் கார்த் மக்களின் உதவி கேட்டுச் சென்றிருக்கும் டினிரேயஸ் டார்கேரியனின் டிராகன்களைக் கைபற்றி, அவரிடம் தன்னைத் திருமணம் செய்துகொண்டால்தான் டிராகன்களைத் தருவோம் என்ற மிரட்டலை முன் வைப்பார், அந்த ஊரின் அரசர்.

ஸ்ஸோஸில் தனது டிராகன்களைச் சிறைபிடித்த இடத்தைக் கண்டுபிடிக்கும் டினேரியஸ் டார்கேரியன், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்திற்குச் சென்று டிராகன்களைச் சிறைபிடித்த வார்லாக்கைக் கொன்று, டிராகன்களையும் மீட்டுவிடுவார்.

கூடவே, கார்த் அரசனைச் சிறையிலடைத்து, அந்த ஊர் மக்களையும் தன்வசப்படுத்துவார்.இரண்டாவது சீஸன் இறுதியில் ஒரு படையே தளபதி ஒயிட்வாக்கரோடு வந்துகொண்டிருக்கும். இதனுடன் சீஸன் 2 முடிவடையும்.

Previous articleகேம் ஆஃப் த்ரோன்ஸ் ரீவைண்ட்: சீஸன் 01
Next articleகேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 3 ரீவைண்ட்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here