கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரீவைண்ட்: சீஸன் 01
1996ல் 66 வயதான ஜார்ஜ் ஆர்ஆர் மார்டின்(George RR Martin) எழுதிய சாங்க்ஸ் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (Songs of Ice and Fire) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட ஒரு தொடர் ஆகும்.
3000 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் மிகப்பழமையான இரண்டு கண்டங்கள் மட்டுமே தொடரில் வரும். ஒன்று வெஸ்டோரோஸ் (Westeros) மற்றும் எஸ்சோஸ் (Essos) ஆகும்.
2011, ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த சீரிஸ் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இதுவரை ஏழு சீஸன் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சீஸனிலும் 10 எபிசோடுகள்.
ஏழாவது சீஸனில் மட்டும் 7 எபிசோடுகள். மொத்தம் 67 எபிசோடுகளைக் (இதுவரை) கொண்டது, இந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’
கேம் ஆஃப் த்ரோன்ஸ் எனபது உண்மைக்கதை கிடையாது. இதுவும் பாகுபலியைப் போல கற்பனைக் கதை தான். இதே பாணியில் தான் பாகுபலி எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம்.
மனதில் இருக்கும் கற்பனையை அப்படியே தத்ரூவமாக நிஜத்திற்கு கொண்டு வந்தால் எப்படி இருக்கும் அதைப் போலத்தான் இதன் தயாரிப்பு இருக்கும்.
இந்தத் தொடரின் பெரும்பான்மையான கதைகள் அயர்லாந்து, கனடா, குரோஷியா, மால்டா, மொராக்கோ, ஸ்காட்லாந்து, ஸ்பெயின் எனப் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.
கதைக்குள் வருவோம் வெஸ்ட்ரோஸ் மற்றும் எஸ்ஸோஸ் என இரு இடங்கள். வெஸ்ட்ரோஸை ஆட்சி செய்வது ஒரே அரியணை. கதை முழுவதுமே வெஸ்டரோஸை நோக்கியே செல்லும்.
ஏழு ராஜ்ஜியங்களைக் கொண்ட கண்டத்தை, ஆட்சி செய்வது ஒரே மன்னன். அந்த அரசன் இறந்த பிறகு, அரியணையை அபகரிக்கப் பல்வேறு ராஜ குடும்பங்கள் போரிடுவதுதான், இதன் கதை.
பொதுவாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கும் குழப்பம் இந்த குடும்பங்களின் எண்ணிக்கை தான்.
மொத்தம் 27 குடும்பங்கள் வரை தொடரில் இருக்கின்றன. ஆனால் 9 குடும்பங்கள் மட்டுமே அதிக ஆதிக்கத்தை செலுத்தும் குடும்பமாக தொடரில் காட்டப்படும்.
தொடரில் அதிகமாக காட்டப்படும் நைட்ஸ் வாட்ச்(Nights Watch) என்ற ராணுவமும் வைல்ட்லிங்க்ஸ்(Wildlings) என்ற பழங்குடியினரும் மற்றும் 1000 வருடங்களுக்கு முன்னாள் இறந்த ஒயிட் வால்கெர்ஸ் (White Walkers) என்ற படையும் வருகின்றனர்.
ஜான் ஆர்ரின் மறைவு
வெஸ்டிரோஸில் இருக்கும் ஏழு ராஜ்ஜியங்களை ஆட்சி செய்யும் அரசன், ராபர்ட் பராத்தியன். அனைத்து நகரங்களின் தலைநகரமான கிங்ஸ் லேண்டிங்க் எனும் இடத்தில் இவரின் அரண்மனை இருக்கிறது.
அரசனின் தலைமை ஆலோசகராகப் பணிபுரிபவரை `Hand of the king’ என்று அழைப்பார்கள். ராபர்ட் பாராத்தியனின் தலைமை ஆலோசகரான ஜான் ஆர்ரின் இறந்தவுடன் ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த நெட் ஸ்டார்க் பதவியேற்க வேண்டும் என ராபர்ட் பாராத்தியன் மன்னன் ஆணையிடுகிறார்.
சூழ்ச்சி கொண்ட, தன்னுடைய நற்பெயரைப் பாதுகாத்துக்கொள்ளவும் நூதனமான சில குழப்பங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர், பீட்டர் பெய்லிஷ் இவர் ராபர்ட் பாராத்தியனின் தம்பி ஆவார்.
ஸ்டார்க் குடும்பத்தின் தலைவர், நெட் ஸ்டார்க். ஸ்டார்க் குடும்பத்தின் தலைவர், நெட் ஸ்டார்க். இவருக்கு ஆறு குழந்தைகளுடன் ஜான் ஸ்னோ என்பவர் நெட் ஸ்டார்கிற்கும், வேறொரு பெண்ணிற்கும் பிறந்தவர்போல் காட்டியிருப்பார்கள்.
கதையில் வரும் நைட்ஸ் வாட்ச் என்னும் ராணுவம் 8000 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக கதையில் சொல்லப்படும். 700 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுவரில் இவர்கள் இருப்பார்கள்.
முதல் சீஸன், முதல் எபிசோடு இந்தச் சுவரிலிருந்துதான் தொடங்கும். மூன்று பாதுகாவலர்கள் அந்த அரணைச் சுற்றி ரோந்து வரும்போது, சில நபர்கள் செத்துக்கிடப்பதைப் பார்க்கிறார்கள்.
ஒயில்டுலங்ஸ் எனும் பழங்குடியினர் செய்த வேலையாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அரணை நோக்கிக் குதிரையில் பாய்வார்கள்.
திடீரென ஒரு ஒயிட் வாக்கர் அவர்கள் முன் வந்து நிற்கிறது. இதில் இருவரை கொன்று விடுகிறது. ஒருவர் மட்டும் தப்பித்து ஓடி விண்டெர்ஃபெல்லுக்கு சென்று விடுகிறார்.
இன்செஸ்ட் உறவு
ராஜ்ஜியங்களின் அரசனான ராபர்ட் பராத்தியன், லானிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்த செர்சி லானிஸ்டர் என்பவரைத்தான் திருமணம் செய்திருப்பார்.
ராபர்ட் பராத்தியனின் மகன் பெயர், ஜோஃப்ரி பாராத்தியன். ஆனால், செர்சி லானிஸ்டரின் தம்பியான ஜேமி லானிஸ்டருக்கும், அவருக்கும் பிறந்தவர்தான் ஜோஃப்ரி லானிஸ்டர் என்று ஊர் முழுக்கப் புறணி பேசிக்கொண்டிருப்பார்கள்.
காரணம், ஜேமிக்கும், செர்சிக்கும் இடையே `இன்செஸ்ட்’ உறவு இருக்கும். இன்செஸ்ட் என்றால் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே உறவு வைத்துக்கொள்வது.
ஜான் ஆர்ரின் மரணத்திற்கு இவர்களின் உறவும் ஒரு காரணம் என்று கதையில் காட்டப்படும். ஜான் ஆர்ரின்தான், ராபர்ட் பராத்தியனின் முந்தைய ‘Hand of the king’.
தார்கேரியன் குடும்பத்துடன் திருமண முடிக்கும் டொத்ராக்கி குடும்பம்
டார்கேரியன் குடும்பம் எஸ்ஸோஸ் பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பம். கதைப்படி, இவர்கள்தான் பல வருடங்களுக்கு முன்பு ஏழு ராஜ்ஜியங்களையும் ஆண்டுகொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் நடந்த ஓர் அரசியல் திருமணத்தால், மொத்த ராஜ்ஜியமும் பராத்தியன் குடும்பத்திடம் சென்றுவிடும். இந்தக் குடும்பத்தில் டினேரியஸ் டார்கேரியன், விசிரஸ் டார்கேரியன் என இருவர் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.
ஆட்சியை மீண்டும் கைப் பிடிக்க ஆசைப்படும் விசிரஸ் டார்கேரியன் அவரது தங்கை டினேரியஸ் டார்கேரியனை, டோத்ராக்கி இனத்தைச் சேர்ந்த கல் டிராகோ என்பவருக்குத் திருமணம் செய்யத் திட்டமிடுவார்.
ஏனென்றால், கல் டிராகோ ஒரு மாபெரும் போர் வீரன். அதனால், இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க இந்த அரசியல் திருமணத்தை நடத்த திட்டமிடுவார், விசிரஸ் டார்கேரியன்.
மேற்கூறிய குடும்பங்கள்தாம் ராஜ குடும்பங்கள். நெட் ஸ்டார்க், ராபர்ட் பராத்தியனுக்காகப் பல போரில் சண்டையிட்டு ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொடுத்தவர்.
செர்சி லானிஸ்டர் – ஜேமி லானிஸ்டருக்கும் இடையே இருக்கும் இன்செஸ்ட் உறவு, ஸ்டார்க் குடும்பத்தின் பாஸ்டர்ட் என்றழைக்கப்படும் ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச்சின் பாதுகாவலனாகச் செல்வது,
நெட் ஸ்டார்க்கின் மகள் சான்ஸா ஸ்டார்க் – ராபர்ட் பராத்தியனின் மகன் ஜோஃப்ரி ஸ்டார்க் திருமண நிச்சயம், கல் டிராகோ – டினேரியஸ் டார்கேரியனின் திருமண வாழ்க்கை,
டிராகன் இருப்பதாக நினைத்து சில முட்டைகளைப் பாதுகாத்து வரும் டினேரியஸ் – டோத்ராக்கி குடும்பம், கிங்க்ஸ் லேண்டிங்கில் நெட் ஸ்டார்க்குடைய ஹேண்ட் ஆஃப் கிங்க்கின் அரசவைப் பணி, டோத்ராக்கி வெஸ்டிரோஸை நோக்கிப் போருக்குப் பயணப்படுவது இவைதான் முதல் சீஸனில் நடப்பவை ஆகும்.
தொடர்ந்து டினேரியஸ் டார்கேரியனை அவரது அண்ணன் விசிரஸ் டார்கேரியன் கொடுமைப்படுத்திக்கொண்டே இருப்பார். அதில் கடும்கோபமடையும் கல் டிராகோ, விசிரஸ் டார்கேரியனை கொடூரமாகக் கொன்றுவிடுவார்.
ராபர்ட் பாராத்தியன் மரணம்
ராபர்ட் பராத்தியன் வேட்டைக்குச் செல்லும்போது நடந்த விபத்தினால், மரணப் படுக்கையில் இருக்க, `இனி நீதான் ஆட்சி செய்யவேண்டும்’ என நெட் ஸ்டார்க்கிற்கை நோக்கி உத்தரவிட்டு இறந்துவிடுகிறார்.
நெட் ஸ்டார்க். அறிக்கையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத செர்சி லானிஸ்டர், அதைக் கிழித்துப்போட்டு நெட் ஸ்டார்க்கைச் சிறையிலடைக்க உத்தரவிடுகிறார்.
நெட் ஸ்டார்க்கின் கொலை
ஜேமி லன்னிஸ்டர் மகனான ஜோஃப்ரி பராத்தியனை அந்தச் சிறு வயதிலேயே அரியணையில் அமரச் செய்யவும் திட்டமிடுவார்.
ராபர்ட் பராத்தியன் இறந்ததையடுத்து, புதிய மன்னன் ஜோஃப்ரி பராத்தியனின் தலையில் மணி மகுடம் ஏறுகிறது. அந்த மயக்கத்திலேயே கைது செய்த நெட் ஸ்டார்க்கின் தலையைத் துண்டிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான்.
துன்பத்தின் போது பிறந்த குட்டி ட்ராகன்கள்
ஸ்ஸோஸில் படை பலத்தைத் திரட்டும் முயற்சியின்போது ஏற்பட்ட ஒரு சண்டையில், கல் டிராகோவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது டினேரியஸ் டார்கேரியனுக்குத் தெரியவருகிறது. எஸ்ஸோஸில் இருக்கும் கல் டிரோகோ, மரணப்படுக்கைக்குச் செல்கிறார்.
எவ்வளவு முயற்சி செய்தும் கணவன் கால் துரோகோ இறந்துவிடுகிறார். ‘கணவர் இறந்த பிறகு மனைவி தீயில் தன்னை எரித்துக்கொள்ள வேண்டும்’ என்பது டோத்ராக்கி மக்கள் பின்பற்றி வரும் வழிமுறை.
தனது திருமண சீதனமாக வந்த பாதுகாக்கப்பட்ட, அதேசமயம் கற்களாகிவிட்ட டிராகன் முட்டைகளோடு மூட்டிய தீக்குள் மெதுவாக நடந்து செல்கிறார்.
விடிந்ததும், டினேரியஸ் டார்கேரியனின் உடலைப் பார்க்க மக்கள் அனைவரும் எழுகின்றனர். சிறிதளவு காயம்கூட இல்லாமல், ஆடை மற்றும் எரிந்த நிலையில் முடங்கி உட்கார்ந்திருக்கிறார், டினேரியஸ்.
அவரது கழுத்துக்கு அருகே ஒரு குட்டி டிராகன் தன் சிறகை விரித்தபடி அமர்ந்திருக்கும்! கூடவே இன்னும் இரண்டு குட்டி டிராகன்களும் அவருடன் எழுந்து மக்களைப் பார்க்கின்றன.
வியப்பில் ஆழ்ந்த மக்கள் அனைவரும் மண்ணில் மண்டியிட்டு டினேரியஸ் டார்கேரியனை வணங்குகிறார்கள்.
ஒரு பக்கம் நெட் ஸ்டார்க் இறப்பு மறு பக்கம் ட்ராகன் பிறப்பு என முதல் சீஸன் முடிவடைகிறது.