சவுரவ் கங்குலி போல் எனக்கு எம்எஸ் தோனி மற்றும் வீராத் கோலி கேப்டனாக உறுதுணையாக இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்
2000 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியின் மூலம் அறிமுகமானவர் தான் இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.
கங்குலி தலைமையில் அறிமுகமான யுவராஜ் சிங் இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவனாக உருவெடுத்தார்.
இந்தியாவை பல ஆட்டங்களில் தோனியுடன் சேர்ந்து பல வெற்றிக்கு வித்திட்டவர் இந்த யுவராஜ் சிங்.
தோனியின் தலைமையில் விளையாடி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்ல முக்கிய வீரராக பங்காற்றினார். தொடர்நாயகன் விருதையும் வென்றார்.
பின்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். ஆனால் அணியில் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை ஓரங்கட்டப்பட்டார் பின்பு தானாகவே ஓய்வையும் அறிவித்தார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அண்மையில் இவரது மனம் திறந்துள்ளார்
“சவுரவ் கங்குலி தலைமையில் விளையாடியது என்னால் மறக்கவே முடியாது அவர் எனக்கு என்றும் உறுதுணையாக இருந்தார்.
கங்குலி இடமிருந்து தோனிக்கு தலைமை சென்றது யாருடைய தலைமை சிறந்தது? என்று கேட்டால் சொல்வது மிகவும் சிரமம்.
சௌரவ் கங்குலி தலைமையில் நிறைய ஆட்டங்கள் விளையாடியதால் அவருடைய தலைமை நினைவுகள் பசுமையாக இருந்தது. ஏனென்றால் கங்குலி எனக்கு உறுதுணையாக இருந்தார்.
கங்குலியை போல தோனியும் கோலியும் எனக்கு உறுதுணையாக இல்லை. இருவரிடம் சாதகமும் பாதகமும் நிறையவே இருந்தது.
மேலும் கொரோனா வைரஸ் குறித்து பேசிய யுவராஜ் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் இறந்து வருவது இதயம் உடைகிறது. மிகவும் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா குறித்து மக்கள் தேவையில்லாமல் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்.
கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவையற்ற வதந்திகளையும் அச்சத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்