ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் கூகிள் டூடுல்: ஹோலிப் பண்டிகை வரலாறு
வசந்த காலத்தில் வரும் முழுநிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளிலும் ஹிந்துகள் வாழும் ஒருசில மேற்கத்திய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ பூசி அல்லது எரிந்து கொண்டாடுகின்றனர்.
அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) எனவும் அழைக்கப்படும்.
இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்றபோது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்தார்.
ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது தெய்வ பக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். இதன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன.
அண்டத்தில் ஒளியின் திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன.
இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.