செஸ் போட்டி: 12 வயது தமிழக சிறுவன் கிராண்ட் மாஸ்டர்
தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் என்பவர் கிராண்ட் மாஸ்டர் பட்டதைப் பெற்றுள்ளார்.
இதற்குமுன், பிரக்யானந்தா என்ற சிறுவன் 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களே ஆனா நிலையில் கிராண்ட் மாஸ்டர் படத்தை வென்றார்.
இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2018-ம் ஆண்டு இவர், இந்தச் சாதனையைப் புரிந்தார். தற்போது, அதை குகேஷ் முறியடித்துள்ளார்.
12 வயது 7 மாதங்கள் 17 நாட்களே ஆனா குகேஷ், இந்தியாவின் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வந்த சர்வதேச செஸ் போட்டியில், 9-வது சுற்றில் வெற்றி பெற்றபோது, கிராண்ட் மாஸ்டர் பட்டதை அடைந்தார்.
ஆனால், உலக அளவில், ரஷ்யாவின் செர்ஜை கர்ஜாகின் என்ற வீரர் முதலிடத்தில் உள்ளார். 12 வயது 7 மாதங்களிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுவிட்டார்.