Home சினிமா கோலிவுட் அச்சம் தவிர்ப்போம்….ஜிப்ஸியை பாதித்த கொரோனா வைரஸ்!

அச்சம் தவிர்ப்போம்….ஜிப்ஸியை பாதித்த கொரோனா வைரஸ்!

329
0
Gypsy Rerelease

Gypsy Rerelease; அச்சம் தவிர்ப்போம்….ஜிப்ஸியை பாதித்த கொரோனா வைரஸ்! ஜீவா நடிப்பில் வந்த ஜிப்ஸி படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜிப்ஸி (Gypsy Rerelease) படம் மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் மறுவெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வந்த மற்றொரு படம் ஜிப்ஸி. படத்தில், ஹீரோ ஜீவா ஊர் ஊராக சுற்றி தனது குதிரையை வைத்து சாகசம் செய்து வாழ்க்கையை கடந்து வந்தார்.

ஹீரோயின் நடாஷா சிங், ஒரு முஸ்லீம் பெண். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

குழந்தை பிறக்கும் சமயத்தில் சில அரசியல் சூழ்ச்சிகளாலும், மதங்களாலும் ஜீவா சிறைக்குச் செல்கிறார்.

சில வருடங்கள் கடந்து திரும்பி வரும் ஜீவா, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை தேடி செல்கிறார்.

ஒருகட்டத்தில், நடாஷா குழந்தையோடு அவரது அப்பாவீட்டில் இருப்பதை கண்டு அங்கு செல்கிறார். ஆனால், நடாஷா வருவதற்கு மறுக்கிறார்.

இதையடுத்து, நடாஷாவின் அப்பா தனது மகளுக்கு முஸ்லீம் முறைப்படி விவாகரத்துக்கு முயற்சிக்கிறார். கடைசியில் அவருக்கு விவாகரத்து கிடைத்ததா? இல்லை இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

கடந்த 6 ஆம் தேதி வெளியான ஜிப்ஸி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இரண்டு வாரமாக வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மக்களின் நலன் கருதி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து திரையரங்குகளையும் மூடும்படி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக ஜிப்ஸி படம் திரையில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஜிப்ஸி படக்குழு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஜிப்ஸி தொடர்ந்து மறுவெளியீடு செய்யப்படும்.

அப்போதும், உங்களது பேராதரவை தந்து திரைப்படத்தை வெற்றியடைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். அச்சம் தவிர்ப்போம்…! விழிப்போடு இருப்போம்…! என்று ஜிப்ஸி படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த தாராள பிரபு படமும் மறுவெளியீடு செய்யப்பட்வதாக அறிவிக்கப்பட்டது.

SOURCER SIVAKUMAR
Previous articleஉங்களுக்கு வைரஸ் இருக்குனு நினைச்சுக்கோங்க: ஹிப்ஹாப் ஆதி!
Next articleஇத்தாலி கொரோனா; உயிரழந்தவர்களில் 99% பிற உடல் குறைபாடு கொண்டவர்களே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here