Home சினிமா கோலிவுட் கோட் சூட்டில் கலக்கும் விஜய் சேதுபதி: துக்ளக் தர்பார் புதிய புகைப்படம்!

கோட் சூட்டில் கலக்கும் விஜய் சேதுபதி: துக்ளக் தர்பார் புதிய புகைப்படம்!

460
0
Tughlaq Durbar Stills

Tughlaq Durbar Stills; கோட் சூட்டில் கலக்கும் விஜய் சேதுபதி: துக்ளக் தர்பார் புதிய புகைப்படம்! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன்,

லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார்.

மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து, விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் அரசியல் கெட்டப்பில் இருக்கும் அருமையான புகைப்படங்கள் எல்லாம் வெளி வந்தது.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் எக்ஸ்க்ளூசிவ்வான புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி கோட் சூட்டில் இருக்கும் புகைப்படம் தான் அது.

தற்போது அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் டப்பிங் புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆக்‌ஷனில் கலக்கிய சுழல் சூறாவளி ஹர்பஜன் சிங்: வைரலாகும் பிரண்ட்ஷிப் மூவி வீடியோ!
Next articleஅன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை: லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here