டீ குடிப்பதால் ஏன் மூளை சுறுசுறுப்பாகிறது?
தேநீர் குடிப்பவர்கள் எப்படி அதிக சிந்தனையும் ஆற்றலும் படைப்பாற்றலும் கொண்டுள்ளனர்?டீ உடலுக்குள் சென்று அப்படி என்ன தான் செய்கிறது?
பெர்கிங்க் பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில் சீரான இடைவெளியில் டீ குடிப்பவர்கள் அதிக கவனமுடனும், அதிக தெளிவுடனும் செயல்படுவதாக நிரூபித்துள்ளனர்.
50 மாணவர்களைத் தேர்வுக்கு எடுத்துக்கொண்டு அதில் பாதிப்பேருக்கு டீயும் மீதமுள்ளோருக்கு தண்ணீரும் ஒவ்வொரு இடைவெளியில் வழங்கப்பட்டது.
தேநீர் குடித்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் கிரியேட்டிவிட்டியுடனும் செயல்படுவது நன்றாகவே தெரிந்தது.
டீயில் என்ன இருக்கிறது?
டீயில் இருக்கும் மூலப்பொருட்களான காஃபின்(caffeine) மற்றும் தேயனின்(theanine) தான் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் ஆகும்.
டீ அல்லது காஃபி குடித்த அடுத்த நிமிடத்திலே மூளை சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு இவையே காரணமாகும். மேலும் நல்ல யோசிக்கும் திறனையும் அறிவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.
எந்த அளவிற்கு நாம் டீ குடிக்கிறோமோ, அதற்கு ஏற்றவாறு நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.
அதிகமாக டீ பருகினால் நாம் அதற்கு அடிமையாகி நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.