மென்பொருள்கள் உதவியுடன் கணினியில் டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்குவது?
வீட்டை சுத்தம் செய்வது போல் கணினியையும் தினம் தினம் சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில், தேவையில்லாத பைல்கள் குப்பைபோல் தேங்கிவிடும். மாதம் அல்லது வருடக்கணக்கில் தேங்கினால், அதை சுத்தம் செய்யவே பல நாட்கள் ஆகும். அதே நேரத்தில் ஒரே புகைப்படம் பல முறை உங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும், ஒரே மென்பொருள் பல முறை, வேறு வேறு ட்ரைவ்களில் காப்பி செய்யப்பட்டிருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து களை எடுப்பதற்கு, ஒரு யுகமே தேவைபட்டாலும் ஆச்சரியமில்லை.
இப்படி கணினியில் தேங்கிய டிஜிட்டல் குப்பைகளை எப்படி எளிதாக அகற்றுவது? இதற்காவே சில மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவரின் பெயர்களை கீழே வரிசை படுத்தியுள்ளேன். கீழே உள்ள மென்பொருள்களின் பெயர்களை கூகுளில் தேடினால், அவற்றை எப்படி டவுன்லோட் செய்வது என்று விளக்கம் தரப்பட்டு இருக்கும். அதில் கூறி உள்ளது போல் டவுன்லோட் செய்து பயன்பெறவும்.
மென்பொருள்கள் பெயர்கள்
CloneSpy
Auslogics Duplicate File Finder
Dupscout
Duplicate Finder
Advanced Duplicates Finder
Duplicate Cleaner Pro/Free [15 day trial]
Anti-Duplicate
Fast Duplicate File Finder