பீஜிங்க்: முதல் முதலில் சீனாவில் கொரோனா பரவலை ஏற்படுத்திய வுகான் மாகாணத்தில் மே 17ஆம் தேதி 335,887 கரு அமில பரிசோதனைகள் (nucleic acid tests) செய்துள்ளதாக, உள்ளூர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதற்கு முந்தய நாள் 222,675 கரு அமில பரிசோதனைகள் செய்துள்ளதாக தெரிகிறது.
வுகான் மாகாணத்தில் மே14 ஆம் தேதிமுதல் அறிகுறி இல்லாத கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதை சீனா துவங்கியுள்ளது.
முதல் முதலில் ஏப்ரல் 8இல் ஏற்பட்ட தொற்றுக்கு பிறகு ஊரடங்கு அங்கு அமலில் இருந்ததாக தெரிகிறது. பிறகு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.
மே முதல் வாரத்தில் கொரோனா பரவல் மீண்டும் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த முடிவை சீனா எடுத்துள்ளது.