அரசியல் கட்சிகளை எதிர்த்து மக்கள் செல்வாக்குடன் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சிறுநீரகத்தை விற்கத் துணிந்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள மோதாடி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுகுர் அலி. இவர் அங்குள்ள ஷிபலி ஆற்றின் அருகே பாலம் கட்டியுள்ளார்.
தன்னுடைய சொந்த நிலத்தை விற்று மூங்கில் கம்புகளைக் கொண்டு ஷிபலி ஆற்றின் நடுவே பாலம் கட்டியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
அரசியல்வாதிகள் மக்களைக் கண்டுகொள்வதே இல்லை. எனவே அவர்களுக்குப் போட்டியாக களத்தில் நின்று வெல்வதே என் நோக்கம் எனக்கூறியுள்ளார்.
இதற்காக என்னுடைய சிறுநீரகத்தை விற்றாவது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் எனக்கூறி அனைவரையும் அதிரவைத்துள்ளார்.