Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18552 புதிய கொரோனா தொற்றுகள், மொத்த கொரோனா தொற்று 5...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18552 புதிய கொரோனா தொற்றுகள், மொத்த கொரோனா தொற்று 5 இலட்சத்தை தாண்டியது

18552 புதிய கொரோனா தொற்றுகள்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18552 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதை அடுத்து, நாட்டின் மொத்த கொரோனா தொற்று 5 இலட்சத்தை தாண்டியது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 5,08,953 ஆக உள்ளது.

குணமடைபவர்களின் எண்ணிக்கை 58.13% ஆக உள்ளது

இதில் 1,97,387 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,95,881 கொரோனா பாதிப்பாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைபவர்களின் எண்ணிக்கை 58.13% ஆக உள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,685 ஆக உள்ளது.

மாராட்டியம் கொரோனாவால் தொடர்ந்து  முதலிடம்

மாராட்டியம் கொரோனாவால் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு 1,52,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 79,815 பேர் கொரோனாவிடமிருந்து குணமடைந்து உள்ளனர் மற்றும் 65,844 பேருக்கு இன்னும் பாதிப்பு இருக்கிறது. இம்மாநிலத்தில் இதுவரை 7,106 பேர் இந்நோயால் இறந்துள்ளனர்.

புதுடெல்லி கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடம்

புதுடெல்லி கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது இங்கு 77,240 பேர் இந்நோயால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 2,492 பேர் இம்மாநிலத்தில் கொரோனாவால் இறந்துள்ளனர் மற்றும் 47,091 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 27,657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு மூன்றாம் இடம்

தமிழ்நாடு 74,622 கொரோனா தொற்றுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 957 பேர் இறந்துள்ளனர். 32,308 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் மற்றும் 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

உலக அளவில் கொரோனா தொற்று 9.4 மில்லியனை தாண்டியது

உலக அளவில் கொரோனா தொற்று 9.4 மில்லியனை தாண்டியது மற்றும் இறப்பு எண்ணிக்கை உலக சுகாதாத நிறுவனத்தின் படி 4,80,000 ஆக வெள்ளிகிழமை வரை உள்ளது.

உலக அளவில் அமெரிக்கா முதலிடம்

உலக அளவில் அமெரிக்கா 4.7 மில்லியன் தொற்றுகளுடன் முதல் இடத்திலும் மற்றும் பிரேசில் 1.1 மில்லியன் தொற்றுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Previous articleதமிழகத்தில் நேற்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு
Next articleஅதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – சூர்யாவின் கண்டன அறிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here