Home சினிமா கோலிவுட் என்னது மாஸ்டர் படத்தில் விஜய் டூயல் ரோலா? லோகேஷ் கனகராஜ் சஷ்பென்ஸ்!

என்னது மாஸ்டர் படத்தில் விஜய் டூயல் ரோலா? லோகேஷ் கனகராஜ் சஷ்பென்ஸ்!

247
0
Master Dual Role

Vijay Dual Role; என்னது மாஸ்டர் படத்தில் விஜய் டூயல் ரோலா? மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

விஜய் மாஸ்டர் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

முதல் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் காம்பினேஷனில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷான், பிரிகிதா, ரம்யா சுப்பிரமணியன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சத்யன் சூரியன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா காரணமாக திரையரங்குகளும் மூடப்பட்டன. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆகையால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில், பேசிய விஜய் சேதுபதி இதில், நானும் ஒரு ஹீரோ தான்.

எனக்கு அவர் வில்லன் என்றால், அப்போ நானும் ஹீரோ தானே. இது ஹீரோ சப்ஜெக்ட் என்றார்.

அப்போது, விஜய் சேதுபதியும், விஜய்யும் நண்பர்களாக இருந்த நிலையில், அவர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் மோதல் உருவாகும் படி கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதோடு, விஜய் சேதுபதிக்கு சகோதரியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

அண்மை காலமாக விஜய் இரட்டை வேடங்கள் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மெர்சலில் மூன்று வேடங்கள், பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த இரு படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்று மாஸ்டர் படத்திலும் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது படம் வெளியானால் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனாவிடம் நஷ்டஈடு கேட்போம், டிரம்ப்
Next articleஒவ்வொரு வருடமும் மீண்டும் கொரோனா வரும், சீன விஞ்ஞானிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here