சீனாவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கையில் கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியாது, இந்த வைரஸ் ப்ளு(Flu) காய்ச்சலை போல மீண்டும் கொரோனா வரும் வாய்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர்.
ஸார்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கொரோனா வைரஸ்
17 வருடங்களுக்கு முன் வந்த சார்ஸ்(SARS) வைரஸ் போல் இது இல்லை எனவும், இது எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் பரவுவதாலும், கண்டுபிடிக்க கடினமாக உள்ளதாலும் இதன் பரவல் மீண்டும் வரக்கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் குழு பீஜிங்கில் திங்கட்கிழமை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.
சார்ஸ்(SARS) வைரஸ் பரவினால் பாதிக்கப்பட்டவர் உடல்நிலை மோசமாகும், அவ்வாறு பாதிக்கப்பட்டவரை தனிமை படுத்தினால் சார்ஸ் பரவாமல் எளிதாக தடுக்க முடியும். ஆனால், அதற்க்கு எதிர்மாறாக கொரோனா தற்போது கட்டுபடுத்தப்பட்ட பின்னரும் சீனாவில் ஏராளமானோர் எந்த அறிகுறியும் இல்லாமல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதனின் உடலில் எந்த அறிகுறியும் இல்லாமல் வாழும் வைரஸ்
“இந்த வைரஸ் பரவலானது மனிதர்களின் உடலுக்குள் அதிக நாட்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து, காலம்பார்த்து பரவும் வல்லமை உடையது,” என ஜின் குயி, எனும் சீன மருத்துவ அறிவியல் கழக(Chinese Academy of Medical Sciences)மூத்த விஞ்ஞானி தெரிவித்தார்.
உலக அளவில் 30 இலட்சம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது மற்றும் 210,000க்கும் அதிகமானோர் இதனால் உயிரை இழந்துள்ளது குறிப்பிடதக்கது.
கோடை வெப்பத்திலும் வாழும் வைரஸ் கொரோனா
“வைரஸ்ஸை வெப்பநிலை பாதிக்கும் என்றாலும் 56 டிகிரி செல்ஸியஸில் 30 நிமிடங்கள் இருந்தால் அது சாத்தியம், ஆனால் அந்த அளவு வெப்பநிலை பொதுவாக காண்பது அரிது”, என பெக்கிங்க் பல்கலைகழகத்தின் (Peking University) நோய் பரவல் துறையின்(Head of the infectious diseases department) தலைவர் வாங் குய்கியாங்க்(Wang Guiqiang) தெரிவித்தார்.
“அதனால், கோடை காலத்திலும் நோய் தாக்குதலின் பாதிப்பு இருக்கும்”
எனவும் தெரிவித்தார்.