ஓய்வு பெறுவதற்கு முன்பே தோனியை சிறப்பித்த ராஞ்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன மகேந்திர சிங் தோனியின் பெயர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பெவிலியனுக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக சரியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இந்த வருடம் அருமையான தொடக்கத்தை கொடுத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கான மைதானம் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ளது. இந்த மைதானத்தில் தெற்குப் பகுதிக்கு (South stand) எம்.எஸ்.தோனி பெவிலியன் என பெயரிடப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி என்ற பெருமை அவரை மட்டுமே சேரும். இதை அறிந்த தோனியின் ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பொதுவாக கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் பெயர்கள் அவர்களின் சொந்த ஊரில் இருக்கும் மைதானங்களில் அவர்களின் பெயர் சூட்டுவது வழக்கம்.
சச்சினின் பெயர் மும்பை வான்கடே மைதானத்திலும் கங்குலி பெயர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் சூட்டப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.