மோடிக்கு ஆப்பு வைக்கும் ட்விட்டர்: அதிர்ச்சியில் பாஜக
சில தினங்களாக ட்விட்டர் அதிகாரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜக அரசு வலியுறுத்தி வந்தது.
பேஸ்புக்கிற்கு ஏற்கனவே பாஜக கடிவாளம் போட்டு விட்டது. அதேபோல் டிவிட்டருக்கும் கடிவாளம் போட பாஜக முயற்சித்து வருகிறது.
காரணம் ட்விட்டர் கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு எதிராக உள்ளது. மேலும் பாஜகவுக்கு எதிரான ஹாஸ்டாக்குகள் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
#gobackmodi என்ற ஹாஸ்டாக் பாஜகவிற்கு மிகவும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹேஸ்டாக் மோடி எங்கு சென்றாலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மேலும் மோடிக்கு ஆதரவான சில ஊடகங்கள் டிவிட்டரில் நடத்திய கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு எதிராகவே உள்ளது.
தேர்தலுக்கு முன் ட்விட்டரை எப்படியாவது மடக்கி பெருமை பேசவைக்க வேண்டும் என பாஜக அரசு முயற்சித்து வருகிறது.
ஆனால் ட்விட்டர் நிதிமன்றத்தையும், மோடி அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மேலும் ட்விட்டர் கருத்துக்கணிப்புகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக உள்ளது.