Home சினிமா கோலிவுட் கொரோனாவை மீறி ஜோதிகா படம் ரிலீஸ்; CM-யே நினைத்தாலும் தடுக்க முடியாது!

கொரோனாவை மீறி ஜோதிகா படம் ரிலீஸ்; CM-யே நினைத்தாலும் தடுக்க முடியாது!

2959
0

Ponmagal Vandhal Digital Release ; திரைக்கு வராமல் டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாகும் சூர்யா படம்? சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் (Ponmagal Vandhal Digital Release) வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் படத்தின் வசூல் பட்ஜெட்டை விட இருமடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் அதை சாமாளிக்கும் விதமாக ஜோதிகாவின் படம் டிஜிட்டலில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், இது குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

SOURCER SIVAKUMAR
Previous articleஅட்சய திருதியை 2020: உப்பு வாங்குவதால் மங்களம் பெருகுமா?
Next articleஆன்லைன் பயிற்சியில் அந்த மாதிரி படங்கள் ! அதிருப்தி அடைந்த கோபிசந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here