Moive Review Kaatrin Mozhi | காற்றின் மொழி திரை விமர்சனம்
ராதாமோகன் இயக்கும் படங்கள் என்றால் நம்பி செல்லலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியுள்ளார்.
மொழி படத்திற்கு பின் ஜோதிகா, ராதாமோகன் கூட்டணி இணைந்த படம் காற்றின் மொழி.
திருமணத்திற்குபின் பெண்ணியம் பேசும் கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடித்தார் ஜோதிகா. ஆனால் காற்றின்மொழி, பெண்ணியத்தையும் மீறி எதார்த்த உண்மைகளையும் புரிய வைத்துள்ளது.
கணவன், மனைவி இருவருமே பணிக்கு சென்றால், அவர்களுக்குள் எவ்வளவு மன அழுத்தம் ஏற்படும்? அவர்களுக்குள் எப்படி சந்தேகங்கள் வளரும்? எப்படி இதை எதிர்கொள்வது என தெளிவாக கூறியுள்ளார் ராதாமோகன்.
சந்தேக குணத்துடன் வாழும் தம்பதிகள் இப்படத்தை பார்த்தால், நிச்சயம் அவர்களுக்கு நல்ல கவுன்சிலிங் கிடைத்தது போன்றும் இருக்கும். மன அழுத்தம் குறைந்தது போன்றும் இருக்கும்.
அந்த அளவிற்கு ஆழ்மனதில் பதியும்படியும், நகைச்சுவையுடனும் கலந்துகட்டி கூறியுள்ளார் ராதாமோகன்.
பொதுவாக, கருத்துப்படம் என்றால் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்காது. இதனால் கருத்துப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே செல்கின்றது.
மொழி படத்தைப் பார்த்தபோது, எப்படி விழுந்து விழுந்து சிரித்தோமோ, அதே அளவு இப்படமும் நம்மை நொடிக்கு நொடி சிரிக்க வைக்கின்றது.
மசாலா என்கின்ற பெயரில் நாளுக்கு நாள் டிவிக்களில் ஆபாசங்களை அள்ளி விதைக்கின்றனர். அந்தரங்க நிகழ்ச்சி என்ற பெயரில் அருவருப்பான வார்த்தைகளை பேசி நிகழ்ச்சியை பார்க்கத் தூண்டுகின்றனர்.
அவர்கள் முகங்களில் கரியை பூசும் அளவிற்கு, இந்த படத்தின் காட்சியமைப்புகள் உள்ளன. ஆபாசத்தை ஆபாசமாக தான் பேச வேண்டும் என்பதில்லை, வேறுகோணத்திலும் அணுகலாம் என ஆணித்தரமாக பதியவைத்து விட்டது காற்றின்மொழி.
திருமணத்திற்கு முன்பை விட தற்பொழுது ஜோதிகாவின் நடிப்பை பார்க்கும்போது, சிலிர்க்க வைக்கின்றது.
மேலும், படமும் ஜோதிகாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்துவது போன்றே உள்ளது. ஜோதிகாவை நடிக்க வைக்கவேண்டும் என அவரின் குடும்பத்திற்காகவே எடுக்கப்பட்ட படம் போன்றே உள்ளது.
இளங்கோ குமரவேல் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ராதா மோகனின் அனைத்துப் படங்களில் இடம்பெறுவார்கள். இதிலும் உள்ளனர்.
லக்ஷ்மி மஞ்சு எப்.எம். ஹெட்டாக நடித்துள்ளார். நிறைய இடங்களில் ஓவர் ரியாக்சன் கொடுப்பது முகம் சுழிக்க வைக்கிறது.
யோகிபாபு இரண்டு மூன்று காட்சிகள் வந்தாலும், கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை. காதலி பெயர் தீபிகா படுகோன என சொன்னாலும், அவர் நயன்தாராவை தான் குறிப்பிடுகின்றார் என தொளிவாகவே தெரிகின்றது.
நயன்தாரா, அவருடைய பெயரை சொல்ல பர்மிஷன் கொடுக்கவில்லை போல, கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சிம்பு வந்தாலே வம்பு. ஜோதிகா குடும்பத்திலும் சின்னதா வம்பு செய்துவிட்டார்.
விதார்த் கிடைத்த கேப்பில் எல்லாம் கிட வெட்டியுள்ளார். சிவக்குமார் ஏற்கனவே டென்சன் பார்டியா மாறிட்டு வர்றாரு… இத வேற பாத்தா அம்புட்டுத்தான்…
படத்தில் டெக்னிகல் டீம் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு இசை கூடுதல் பலம்.
ராதாமோகனின் திரைக்கதைக்கும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவிற்கும் உயிர் கொடுத்துள்ளது காசிப்பின் இசை.
இந்த படத்தை அனைத்து வயதினரும் நிச்சயம் பார்த்து மகிழலாம். பார்த்தே தீர வேண்டிய படமும் கூட.