Kavin Corona LockDown; கொரோனாவால் ஆளே மாறிப்போன கவின்: வைரலாகும் புகைப்படம்! கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கவின் அதிகளவில் முடி வளர்ந்து தாடி மீசையுடன் ஆளே மாறிப்போகியுள்ளார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கவின் ஆளே மாறிப்போகியுள்ளார்.
கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.
அந்த வகையில், நடிகர் கவின் வீட்டிலே தானிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில், நான் தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், அந்தப் புகைப்படத்தில் அதிக தலை முடியுடன் தாடி, மீசையும் அதிக அளவில் வளர்ந்து இருப்பது போன்று இருக்கிறது.