Home நிகழ்வுகள் இந்தியா விளம்பரம் இல்லாத மக்கள் சேவையில் கேரளா முதல்வர்.

விளம்பரம் இல்லாத மக்கள் சேவையில் கேரளா முதல்வர்.

337
0

விளம்பரம் இல்லாத மக்கள் சேவையில் கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் அவரது மதிப்பை மேலும் உயர்த்தி உள்ளது.

கேரளா: கேரள அரசாங்கம் சார்பில் அண்மையில் கேரள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டுள்ளது. அதில் 19 பொருட்கள் இருந்தன.

இந்த பொருட்கள் ஒரு வெள்ளை பையில் வைத்து ஒரு தொகுப்பாக அனைவருக்கும் தனித்தனியே வழங்கப்பட்டன. அதில் சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை, டீ தூள் உள்ளிட்டவையும் அடங்கும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த பொருளிலும் அரசாங்க முத்திரையோ, முதல்வர் பெயரோ ஏதும் பொறிக்கப்படவில்லை. அனைத்து பொருட்களும் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள மக்களுக்கு தரமான பொருட்களை அரசே இலவசமாக வழங்கினாலும், அதில் முதல்வர் படமோ அரசின் எம்பலமோ இடம்பெற வில்லை.

தொகுப்பு இருந்த கைப்பையும் வெள்ளை நிறத்தில் எந்த எழுத்துக்களும் பொறிக்கப்படாத துணிப்பை தான். பொருட்களிலும் அந்தந்த பிராண்ட் பெயர்கள் மட்டுமே இருந்தது.

அரசால் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துமே அரசின் முத்திரை, ஆளும் முதல்வரின் முகம் அல்லது கட்சி நிறுவனரின் முகம் அல்லது முடிந்தால் அனைத்துமே கூட பொறிக்கப்பட்டு ஆளும் கட்சியின் நிறத்தில் தான் வழங்கப்படும்.

அது அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டது என தெரிவதற்கான அரசியல் ஆதாயமாகவே பார்க்கப்படுகிறது. மக்களுக்கு உதவியோ, இலவசமோ எதுவானாலும் அரசின் பெருமை கட்டாயம் அந்த பொருள் பேசும்.

இலவசம், நிவாரணம், உதவி இப்படி பெயர்கள் எதுவானாலும் அதை மக்களுக்கு கொடுக்கும்போது, பொருளைவிட பொருளின் மேலுள்ள அடையாள விளம்பரமே பளிச்சென்று தெரியும்.

நம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாம் எதையும் இலவசமாக கொடுக்கவில்லை. மாறாக இவையெல்லாம் அவர்களின் உரிமை என்பதை உணர்ந்த அரசால் மட்டுமே விளம்பரம் தேடாமல் சேவை செய்ய முடியும்.

ஆனால் கேரளாவில் ஆளும் பிரனாயி விஜயன் அரசு மக்கள் நலனை சார்ந்த அரசு என்று இதன் மூலம் நிரூபித்துள்ளது. மற்ற அரசுகளுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டுதலாக அமையட்டும்.

மக்கள் இதை பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மக்களின் நலனே ஒரு அரசை சாதிக்க செய்யும் என்பதை உணர்ந்து பணியாற்றும் கேரள முதல்வருக்கு பாராட்டுக்கள்.

Previous articleஇர்ஃபான் கான் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார்
Next articleயார் கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே முத்தம் கொடுக்கும் ஓவியா பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here