Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவரும் கேரளா

கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவரும் கேரளா

322
0
கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவரும் கேரளா

கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவரும் கேரளாவில் 93% பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். மேலும் புதிய தொற்றுகள் எண்ணிக்கையும் ஏறக்குறைய இல்லை என்ற நிலையை அந்த மாநிலம் எட்டியுள்ளது.

கேரளா: உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தாக்கத்தை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா தொற்றின் குணமைடைதல் விகிதம் என்பது இந்திய அளவில், 28.71% ஆக இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் இந்த அளவு 93.24% இருந்து வருகிறது.

ஆச்சரியத்தை அளிக்கும் இந்த முன்னேற்றம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதன் முதலில் கேரளாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 98 நாட்கள் ஆகின்றன.

முதன்முதலில் சீனாவின் வூஹானிலிருந்து கேரளாவுக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு தான் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ட்ரேசிங் முறையில் சோதனைகள் நடத்தப்பட்டன.

அதிக அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தற்போது 30 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர் மேலும் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

அரசின் கொரோனா மாநில நிபுணர் குழுவின் தலைவரான மருத்துவர் பி.இக்பால் கூறுகையில், “ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 100 பேரை அடையாளம் கண்டறிந்தோம்.

அனைவரையும் தனிமைப்படுத்தி, வெளியில் சென்று மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவான நோய் தொற்றுள்ள நபர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து அனைவரும் குணமடைந்துள்ளனர், என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார்.

இதுவரை தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா தொற்று என்பது உலகிற்க்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Previous articleவிச வாயு கசிவு 5 பேர் பலி விசாகப்பட்டிணம், இரசாயன ஆலையினால் வந்த ஆபத்து
Next articleகோலி தோனி சேர்ந்து யுவராஜ் முதுகில் குத்தினார்கள், யுவராஜ் சிங் தான் கேப்டன் ஆக வேண்டியது விதியால் தோனி ஆனார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here