Home நிகழ்வுகள் இந்தியா மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்டுகிறதா ஊரடங்கு?

மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்டுகிறதா ஊரடங்கு?

286
0
மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்டுகிறதா ஊரடங்கு?

மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்டுகிறதா ஊரடங்கு?  நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

மும்பை: கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த மார்ச்-23-ம் தேதியிலிருந்து நாடு தழுவிய முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கின் 4-ம் கட்டத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு என்பதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் மும்பையில் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வரவிருக்கும் 4-ம் கட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாடீல் கூறுகையில், “29,30 ஆகிய இரு தினங்களில் நிலைமை குறித்து மத்திப்பாய்வு செய்யப்படும்.

பின்னர் பிரதமரின் அறிவிப்பை அடுத்து மே-31-ம் தேதிக்குப்பிறகு தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும். எனினும் பிரதமர் ஊரடங்கை நீட்டிக்க விரும்பினால் நாம் அதற்கு ஒத்துழைக்கவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

ஊரடங்கை நீட்டிப்பது என்பது மத்திய அரசின் முடிவை பொறுத்தது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கு நீட்டிக்கப்படுவதையே விரும்புகிறார் என அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூத்த தலைவர்கள் அதிக கவனத்துடன் ஊரடங்கில் தளர்வுகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மும்பை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தானே, பூனே, டெல்லி, அஹமதாபாத், கொல்கத்தா, ஹைதெராபாத், இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய பெருநகரங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மும்பையில் மட்டும் இதுவரை 35,485 கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளனர். 1,135 பேர் மும்பையில் இதுவரை நோய் தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.

இதனால் இங்கு 5-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுவது என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

Previous articleதிருடிய பொருட்களுடன் டிக்டாக்கில் ஆட்டம் போட்ட பெண்
Next articleதன்னம்பிக்கை வெற்றியின் விதை | self confidence

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here