Home சினிமா கோலிவுட் அர்ஜூன், ஹர்பஜனுக்கு நடுவில் லோஸ்லியா: ஃப்ரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அர்ஜூன், ஹர்பஜனுக்கு நடுவில் லோஸ்லியா: ஃப்ரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

279
0
Friendship First Look Poster

Friendship Movie First Look; அர்ஜூன், ஹர்பஜனுக்கு நடுவில் லோஸ்லியா: ஃப்ரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! பிக்பாஸ் புகழ் லோஸ்லியா ஹீரோயினாக அறிமுகமான ஃப்ரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஃப்ரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஃப்ரண்ட்ஷிப். இந்தப் படத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். அதுவும் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான லோஸ்லியா இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ஆர்ஜூன், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு நடுவில் லோஸ்லியா இருப்பது போன்று போஸ்டர் காட்டப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுக்கு பின்புறம் பெரிய கட்டிடம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது வெளிநாட்டில் நடக்கும் சம்பவம் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஃப்ரண்ட்ஷிப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால், ப்ரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரும் ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு என்று பதிவிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஃப்ரண்ட்ஷிப் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleதளபதி 65 அப்டேட்: விஜய் உடன் ஜோடி சேரும் மடோனா செபாஸ்டியன்?
Next articleவெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here