Home சினிமா கோலிவுட் Malavika Mohanan; மீண்டும் பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன்!

Malavika Mohanan; மீண்டும் பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன்!

359
0
Malavika Mohanan

Malavika Mohanan; மீண்டும் பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன்!

Master மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தைத் தொடர்ந்து நிர்னனயகம் என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து நானு மாட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்திலும், பியாண்ட் தி கிளவுட்ஸ் என்ற பாலிவுட் படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்த பேட்ட படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இதில் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்து ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றார். எனினும், இதில் அவருக்கு குறைவான காட்சிகள் தான் இருந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் (Master) படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் 129 நாட்கள் படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் (Malavika Mohanan) கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து (Malavika Mohanan Bollywood) பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தை ஃபர்ஹான் அக்தர் தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக, இவர், ரன்வீர் சிங்கின் குல்லி பாய் படத்தை தயாரித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க இருக்கிறது என்றும், படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் முடிந்த பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleCorona Virus Outbreak; 28 பாசிட்டிவ் கொரோனா கேஸ்
Next articleபரதேசி பட அதர்வா ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here