Home சினிமா கோலிவுட் என்ன நண்பா ரெடியா? வி ஆர் வெயிட்டிங் Master FDFS!

என்ன நண்பா ரெடியா? வி ஆர் வெயிட்டிங் Master FDFS!

460
0
Master FDFS

Master Trailer, Master FDFS மாஸ்டர் திரைக்கு வரயிருந்த இன்று படத்தின் முன்னோட்டம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.

மாஸ்டர் டிரைலர் வேண்டும் ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

பிகில் படத்திற்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இன்று ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருந்தது. கொரோனாவால் வெளியாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்யின் மாமா, சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் டிரைலர் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாஸ்டர் டிரைலர் MasterTrailer தற்போது டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் மாஸ்டர் டிரைலர் வேண்டும் என்பது போன்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

அதோடு MasterFDFS ஹேஷ்டேக்கும் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சிகளில் விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதோடு, விஜய்தான் டிஆர்பி கிங் என்றும் அழைக்கப்படுகிறார்.

மாஸ்டர் படம் இன்று வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவு மேலும், நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்றும், அப்படியில்லை என்றால் விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் என்றும் தகவல் பரவி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleமேனேஜர் மூலம் சாவின் விளிம்பில் இருந்தவர்களை காத்த அஜித்
Next articleஇது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய ஹன்சிகா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here