Master: மாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்களை சுட்டிக்காட்டிய இயக்குநர்! மாஸ்டர் படம் தொடங்கியதிலிருந்து என்ன என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தது என்று பிரபல இயக்குநர் ரத்னகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்களை ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர், சஞ்சீவ், ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆடை பட இயக்குநரும், மாஸ்டர் பட வசனகர்த்தாவுமான ரத்னகுமார் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா மட்டும் வரவில்லை என்றால் இந்த நேரம் மாஸ்டர் படம் வெளியாகியிருக்கும்.
முதலில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.
அதன் பின்னர் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு, நெய்வேலி படப்பிடிப்பின் போது போராட்டம், தற்போது கொரோனா. இது ஒரு ரசிகனாக வருத்தமாக உள்ளது என்று என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி பல சிக்கல்களை கடந்த மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, எந்த ஆண்டும் இல்லாமல், இந்த ஆண்டில் மாஸ்டர் படப்பின் போது விஜய்யை நேரில் பார்ப்பதற்கு குடும்பத்தோடு சென்று ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இதன் காரணமாக எந்த படமும் செய்யாத சாதனையை மாஸ்டர் படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.