Master Release; விஜய்யை குறி வைத்த மோடி? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா ரசிக குஞ்சுகளே? உங்க காமெடிக்கு ஒரு அளவு இல்லையா?
விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா தாக்குதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிராக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.
அன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து 23 ஆம் தேதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
எனினும், கொரோனா விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லாத நிலையில், அது குறித்து விபரீதத்தை யாரும் அறிந்திரா நிலையிலும், நாளுக்கு நாள் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என்றும் பலரும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து எச்சரித்து வந்தனர்.
144 தடை உத்தரவு
கொரோனா வைரஸ் காரணமாக மாநிலம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சமூக விலகல்தான் ஒரே தீர்வு.
குழந்தைகள். வியாபாரிகள், பெரியவர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகள், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனை மக்கள் தங்களது சுயகட்டுப்பாடுடன் எதிர்க்க வேண்டும்.
21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
இல்லையென்றால் நாடு பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இந்தியாவிலிருந்து கொரோனாவை விரட்டியடிக்கும் நோக்கில், இன்றிரவு (மார்ச் 24) 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும்.
நாட்டு மக்கள் தற்போது எங்கு இருக்கிறீர்களோ, அடுத்த 21 நாட்களுக்கு அங்கேயே இருங்கள் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு மனித உயிரும் முக்கியம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
கடைகள் செயல்படும்
ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், சிறு கடைகள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள், காய்கனி கடைகள் செயல்படும்.
வங்கிகள், ஏடிஎம், காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கும். தொலைத் தொடர்பு இணைய சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும்.
உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறலாம். பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு ஆகியவை இயங்கும்.
மேலும், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் நெடுஞ்சாலையோர கடைகள் செயல்படும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து சேவையில் எந்த தடையும் இருக்காது.
போன்றவை குறித்து மத்திய அரசால் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊரங்கு உத்தரவு என்றால், எதுவுமே இயங்கக் கூடாது. இப்படி அறிவிப்பு வெளியிட்டால், பொது மக்கள் வெளியில் வரத்தான் செய்வார்கள்.
மோடியின் உரைக்கும், விஜய்யின் மாஸ்டர் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் இருக்கிறது என்றே சொல்லலாம்.
மாஸ்டர் ஏப்ரல் 9 ரிலீஸ்
மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு வந்தது.
ஒருநாள் ஊரங்கு உத்தரவைத் தொடர்ந்து 21 நாட்கள் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒருநாள் ஊரடங்கின் போது எந்த கடையும் இயங்கவில்லை. மாறாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, கடைகள் உள்பட பல சேவைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விஜய் மாஸ்டர்
ஆனால், மோடி கொரோனாவுக்கு எதிராக இப்படி செய்யவில்லை என்றும் விஜய்யின் மாஸ்டர் படத்தை குறி வைத்தே இவ்வாறு செய்கிறார் என்றும் அவருடைய ரசிகர்கள் சிலர் அறியாத்தனமாக கூவி வருகின்றனர்.
விஜய்யை தாக்குவதற்கு கொரோனா வைரஸை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் கூறுகிறார்கள். விஜய்-யை தாக்க ஏன் கொரோனா வைரஸ் தேவைப்படுகிறது.
ரெய்டு நடத்தும்போதே புடிச்சு சிறையில் அடைத்து இருக்கலாமே? இதற்கு கொரோனா ஒரு சாக்கா? கூவுவதற்கு ஒரு எல்லை உண்டு.
உலக நாடுகள் அனைத்தும் கதிகலங்கி கொண்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் வரவில்லை என்பது சிலருக்கு கவலையாக உள்ளது.
நீங்கள் நேராக விஜய் வீட்டிற்கு சென்று மாஸ்டர் படத்தை போட்டுக் கட்டச்சொல்லுங்கள். அதை விட்டுபுட்டு சோசியல் மீடியாவில் காமெடி செய்துகொண்டு உள்ளீர்கள்.